சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியார் வரிசையில் நின்னு வாக்களித்த சொந்த ஊர் பூத்தில் கூட திமுகவுக்கு தான் அதிக ஓட்டு

Google Oneindia Tamil News

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்த பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

நேற்று மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர். பார்த்திபன் அதிமுக வேட்பாளர் சரவணனைவிட ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 804 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

dmk get high vot compare then aiddmk in cm palaniswmays siluvampalayam village

சேலம் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியாகும். இங்குள்ள சிலுவம்பாளையத்தில் தான் முதல்வர் பழனிசாமி தேரதலின் போது வரிசையில் நின்று வாக்களித்தார்.

ஆனால் அவர் வாக்களித்த பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளது அதிமுகவிரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்த சமூக வலைதளவாசிகள் சகட்டு மேனிக்கு எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செய்து வருகிறார்கள். இரும்புதேசத்து கரும்பு மனிதருக்கு இப்படி ஒரு சோதனையா என ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் தேர்தல் முடிவு தாமதம்.. பின்னணியில் சதியா? நடந்தது என்ன? திருமாவளவன் பதில்சிதம்பரம் தொகுதியில் தேர்தல் முடிவு தாமதம்.. பின்னணியில் சதியா? நடந்தது என்ன? திருமாவளவன் பதில்

இன்னொருவர், முதல்வர் பழனிசாமியின் பக்கத்துல நின்று ஒட்டுபோட்ட தாத்தா கூட அதிமுகவுக்கு வாக்களித்திருக்க மாட்டார் என கேலி செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஒபிஎஸ் எவ்வளவோ பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

English summary
dmk get high vot compare then aiddmk in cm palaniswmay's siluvampalayam village at salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X