சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சேலம்: தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் - வீடியோ

    திமுக தலைவர் , வழக்கறிஞர் மாநாட்டில் ,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தலைமை அலுவலகத்தில் தேர்தல் கள பணி அலுவலகத்தில் வழக்கறிஞர் பணியாற்றியத்தை போன்று இந்த சட்டமன்ற தேர்தலில் மாவடந்தோறும் களபணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

    DMK organizing secretary RS Bharathi condemns Minister Senkottayan

    அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து இந்த அலுவலகம் துவங்கப்பட்டு உள்ளதாக இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் வழக்கறிஞர் கள பணிகள் அலுவலகம் தொடங்கப்படும் என்றும் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் வழக்கறிஞர்கள் செயல்படுவார்கள்/

    கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாத முதல்வர் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் புதிதாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்றும் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை இது வரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    திமுக தலைவர் சொல்வதை மட்டுமே செயற்படுத்தி வருகிறார் முதல்வர். தேர்தல் வருவதற்கு முன்பாகவே தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் திகழ்கிறார். ஆளுங்கட்சி செய்கின்ற சட்ட விரோத, அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க சட்ட ரீதியாக திமுக வழக்கறிஞர்கள் செயல்படுவார்கள்.

    DMK organizing secretary RS Bharathi condemns Minister Senkottayan

    திமுக ஆட்சி வந்ததும் எட்டுவழி சாலையை திட்டத்தை கைவிடுவோம் என்றார். மக்கள் நினைக்கும் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் நிச்சியம் இடம்.
    நீட் தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலம். உலகறியும் சுந்தர் பிச்சை மற்றும் உலகத்திற்கே வழிகாட்டி அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் பிறந்த மாநிலம். இது அப்படி இருக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க முடியாது எனக் கூறியிருப்பது வெட்கக்கேடானது. .

    திமுக கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது கூறியதை தான் தற்போது தலைமை தேர்தல் ஆணையரும் தெரிவித்துள்ளார்" இவ்வாறு ஆர் எஸ் பாரதி கூறினார்.

    English summary
    DMK organizing secretary RS Bharathi said it was a shame that Minister Senkottayan had said that NEET training could not be given to teachers in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X