சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

    சேலம்: நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் புதிய சாலைகளை அமைக்க முடியவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    இதையடுத்து வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி இல்ல திருமண விழாவில் முதல்வர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இன்று காலை சேலம்-பெங்களூரு பை-பாஸ் சாலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்.

    தயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி!தயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி!

    தமிழகம்

    தமிழகம்

    அப்போது உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு செய்ய வேண்டியவை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறுகையில் தமிழகத்தில் அரசு திட்டங்களுக்காக எங்குமே நிலம் எடுக்க முடியவில்லை.

    போராட்டம்

    போராட்டம்

    போராட்டம், ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு, வழக்கு ஆகியவற்றால் சாலை விரிவாக்கம், மின்கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தாமதமாகி வருகிறது. கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் சொல்லவில்லை.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டாதவர்கள் போலீஸாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தன்னாட்சி பெற்ற அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்.

    அமமுக கட்சி

    அமமுக கட்சி

    உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். தற்போது அமமுக என்ற கட்சியே இல்லை. அக்கட்சியிலிருந்து ஏராளமானோர் விலகி அதிமுகவில் விரைவில் இணைவர் என்றார்.

    English summary
    CM Edappadi Palanisamy says that no land to be taken for road expansion process as people indulge in protest, filing case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X