சூரசம்ஹாரம் ஸ்டார்ட்..கையில் வேலுடன் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்.. ஒட்டப்பட்ட வேகத்தில் கிழிப்பு
சேலம்: அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று வர்ணிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இன்றைக்கு ஒற்றைத்தலைமை விவகாரத்தால் பிளவு பட்டு நிற்கின்றனர். அதிமுக தொண்டர்களோ மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி அனலை அதிகரித்து வருகின்றனர். அப்படி ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் ஒன்று உடனே கிழிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார்? என்ற போட்டியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் புதுவிதமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்களால் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈனபிறவி..அதிமுக உங்க அப்பன் வீட்டு சொத்தா? முட்டிபோட்டு முதல்வரான எடப்பாடி! போஸ்டரால் பரபர பரமக்குடி

ஒற்றைத்தலைமை
பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார். இதனால் கலக்கத்தில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துவிடக்கூடாது என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஓபிஎஸ் நகர்வு
அதிமுக சட்ட விதிகளின் படி எடப்பாடி பழனிச்சாமியும்அவரது ஆதரவாளர்களும் செயல்படவில்லையென்று பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அளித்திருக்கும் நிலையில் அதிமுகவின் சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க பதில் கடிதம் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக சட்ட நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு
இருப்பினும், ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக ஆவதற்கான ஆயத்த பணிகள் திரைமறைவில் எடப்பாடி பழனிசாமி அணியினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரசம்ஹாரம் ஸ்டார்ட்
விரைவில் அசுரனை அழிக்க முருகன் தயார் நிலையில் உள்ளதாக எடப்பாடிபழனிசாமியை முருகன் போல் கையில் வேலோடு சித்தரித்து சூரசம்ஹாரத்திற்கு தயார் என்ற நிலையில் சுவரொட்டிகள் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்களால் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர் ஒட்டிய வேகத்தில் கிழிப்பு
இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வேகத்திலேயே கிழிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை ஓட்டியது யார்? ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்தது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.