• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மருமகள் மீது ஒரு கண்.. இணங்க மறுத்த அமுதா.. கோபமடைந்த மாமனார்... கோடாரியால் வெட்டி கொலை

|

சேலம்: மாமனாருக்கு மருமகள் அமுதாமேல் ரொம்ப நாளாகவே ஒரு கண்... தன் ஆசைக்கு அமுதா மறுக்கவும் கோடாரியை எடுத்து வந்து மருமகளை வெட்டிவிட்டார் மாமனார் பழனி!

சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் உலிபுரம் நரிகரடு.. இங்கு வசித்து வந்தவர் பழனி.. இவர்தான் அந்த மாமனார்.. 63 வயதாகிறது.

father in law arrested murder case near salem

அறிவழகன் என்ற மகன் உள்ளார். இவரது மனைவி அமுதா.. 40 வயதாகிறது.. இந்த தம்பதியினருக்கு அஜித், ரித்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர்.. அஜித்துக்கு 19 வயசு, ரித்திக்குக்கு 16 வயதாகிறது.

அறிவழகன், கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆனாலும் மாமனாருக்கு அமுதா மேல் ஆசை இருந்திருக்கிறது.. பலமுறை தவறான கண்ணோட்டத்திலும் பார்த்து வந்துள்ளார்.. எனினும் அமுதா இதை கணவரிடம் சொல்லவில்லை.. குடும்பத்தில் பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்று நினைத்து பொறுத்து பொறுத்து போனார்.

இந்நிலையில், நேற்று அறிவழகன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார்... வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மாமனார் பழனி, அமுதாவை ... வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்த முனைந்துள்ளார்.. அமுதா அதற்கு பலமாக எதிர்ப்பு தெரிவிக்கவும், அடித்து அமுதாவை துன்புறுத்தியும் உள்ளார்.. ஆனால் கடைசிவரை அமுதா மாமனாருடன் போராடினார்.

இதை பார்த்து டென்ஷன் ஆகிவிட்ட பழனி, பக்கத்தில் இருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக அமுதாவை வெட்டி விட்டார்... இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பிறகு பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அமுதாவின் அலறலை கேட்டு வந்தஅக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால் சடலமாகத்தான் அமுதாவை கண்டனர்.

மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனையை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. மாதவிலக்கு பெண்கள் சமைத்தால்!

உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லவும், பழனியை தேட ஆரம்பித்தனர்.. அதற்குள் மருமகளை வெட்டிக்கொன்றுவிட்டதாக பழனியே போலீசில் சரணடைந்தார். பழனியிடம் நடத்திய விசாரணையில், "ரொம்ப நாட்களாகவே மருமகள் மீது எனக்கு ஆசை.. ஆனால் என் மனசுக்குள்ளேயே அதை வெச்சுக்கிட்டேன்.. அப்பதான் அமுதாவிற்கு வேறு சில ஆண்களுடன் உறவு இருப்பது எனக்கு தெரிந்தது.. இது எனக்கு தைரியத்தை தந்துவிட்டது.

  மனைவியின் பிறப்புறுப்பில் கம் போட்டு ஒட்டிய கணவன்

  அந்த ஆண்களுடன் மட்டும் உறவு கொள்ளும்போது, என்னிடமும் உறவு கொண்டால் என்ன என்று கேட்டேன்... அதனால்தான் வற்புறுத்தினேன்.. அமுதா மறுக்கவும் ஆத்திரத்தில் கொன்றுவிட்டேன்" என்றார். மருமகள் மீது காம வெறி பிடித்து.. அவரை அடைய துடித்து.. இறுதியில் மாமனார் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி, பரபரப்பை தந்து வருகிறது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  father in law murdered daughter in law and arrested now near salem
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X