• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பயங்கரம்.. திடீர்னு மாடிக்கு ஓடிய கோபால்.. பெண் சொன்ன வார்த்தை.. சுத்தியல் எடுத்து.. அதிர்ச்சி

|

சேலம்: பெற்ற அப்பாவை பார்த்து மகள் சொன்ன அந்த வார்த்தை, இப்படி ஒரு பயங்கரத்தில வந்து முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

  சேலம்: மகளை சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை: மாடியில் இருந்த குதித்து தற்கொலை!

  சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ளது ஆதிக்காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி கோபால்- மணி. இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.

  பிரியங்கா அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்... 6 மாசத்துக்கு முன்பு, கோபாலுக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் சென்னையில் சிகிச்சையும் எடுத்து கொண்டுள்ளார்.. இப்போது கொஞ்சம் சுமாராக இருப்பதால், கிராமத்திலேயே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

  மனைவி

  மனைவி

  மனைவி, விவசாய வேலை செய்கிறார்.. அடிக்கடி வெளியூர்களில் இருந்தும் வயல் வேலைக்கு அழைப்பார்கள் என்பதால், வெளியூருக்கம் அடிக்கடி சென்றுவருவார்.. மகன் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இப்போது ஸ்கூல் திறக்கவில்லை என்பதால் பிரியங்கா வீட்டில்தான் இருக்கிறார்.. அதேபோல, கோபாலும் காய்கறி விற்கும் நேரம் போக வீட்டிலேயே இருப்பார்.

  கோபால்

  கோபால்

  ஆரம்பத்தில் கோபாலுக்கு அந்த கிராமத்தில் தனி மரியாதை இருந்திருக்கிறது.. ஆனால், இப்போது மனநிலை பாதிக்கப்படவும் இதை அந்த ஊரில் இருப்பவர்கள் கிண்டலாக பேசி வந்துள்ளனர்.. கிறுக்கன் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.. இதனால் மனம் நொந்த கோபால், யாரிடம் எதுவும் வம்புக்கு போகாமல், தட்டிக் கேட்காமல் அமைதியாகவே ஒதுங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பேச்சு வாக்கில் மகள் பிரியங்காவும் அதே மாதிரி கிறுக்கன் என்று அப்பாவை சொல்லிவிட்டார்.. இதுதான் கோபாலுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது..

   ரத்த வெள்ளம்

  ரத்த வெள்ளம்

  சேர்த்து வைத்த ஆத்திரம் ஒரு பக்கம், மகளே தன்னை இப்படி ஒரு வார்த்தையை சொல்லி கேலி செய்து விட்டாளே என்கிற அதிர்ச்சி ஒருபக்கம் சேர்ந்து கொண்டது.. பிரியங்காவை கொடூரமாக தாக்கியதுடன், அங்கிருந்த சுத்தியலை எடுத்து அடித்து கொன்றே விட்டார் கோபால். மகள் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை பார்த்ததுமே பதறி போய் உள்ளார்.. உடனடியாக தன்னுடைய தம்பிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார்.. ஆனால், அவர்கள் யாரும் இதை நம்பவே இல்லை.. போனை வைத்துவிட்டார்கள்..

  தற்கொலை

  தற்கொலை

  அதனால் கோபால், நேராகவே தம்பி வீட்டுக்கு சென்று அவர்களை கையோடு அழைத்து வீட்டுக்கு வந்து சடலத்தை காட்டி உள்ளார்.. அப்போதுதான் அவர்கள் உறைந்து போய் நின்றனர்.. கோபாலுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் கதறி கதறி அழுதார்.. ஆசை ஆசையாக வளர்த்த மகளை, இப்படி நாமளே கொன்றுவிட்டோமே என்று கத்தி கொண்டே மாடிக்கு ஓடி சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலையே செய்துகொண்டார்.

   2 மரணம்

  2 மரணம்

  கொஞ்ச நேரத்தில் 2 மரணங்கள் ஒரே வீட்டில் நடந்தது அந்த ஊரையே உறைய வைத்துவிட்டது... இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்து போலீசார், அப்பா - மகள் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையும் தொடர்ந்து நடக்கிறது.. அந்த ஒத்த வார்த்தை 2 உயிரையும் பறித்து விட்டது உச்சக்கட்ட சோகத்தில் அந்த கிராமத்தையே மூழ்கடித்து வருகிறது!

   
   
   
  English summary
  Father killed his daughter due to family issue near Salem
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X