சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அநியாயமா இருக்கே.. பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி-வீடியோ

    சேலம்: சேலம் கோயில் திருவிழாவில் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும் கச்சேரியில் பாடியதற்கு ஊதியமாக பெறப்பட்ட ரூ 57 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளது உருத்திர வன்னிய மகாராஜா திருக்கோவில். இந்த கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டுப்புற பாடல் கலைஞர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் நாட்டுப்புற கச்சேரி நடத்தினர். பின்னர் கச்சேரியை முடித்துவிட்டு 50 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் சேலத்தை நோக்கி சென்றனர்.

    நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம் நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம்

    பறக்கும் படை

    பறக்கும் படை

    அப்போது ஜலகண்டாபுரத்திலிருந்து தாராமங்கலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    பறிமுதல்

    பறிமுதல்

    இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டுப்புற பாடல் கலைஞர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் நாட்டுப்புற கச்சேரி நடத்தினர். பின்னர் கச்சேரியை முடித்துவிட்டு 57 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் சேலத்தை நோக்கி சென்றனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனால் ஆத்திரமடைந்த புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பிக் கொடுத்தனர்

    திருப்பிக் கொடுத்தனர்

    பின்னர் பணம் கொடுத்த கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள்தான் பணம் கொடுத்தோம் என பேப்பரில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.

    English summary
    Salem flying squads seized the amount from Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy which they got for conducting concert.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X