• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்!

|
  லவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்!

  சேலம்: "நான் ஒருத்தரை மனசார லவ் பண்ணினேன்.. பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. அதுக்குதான் என்னை அவங்க அடிச்சாங்க.. தப்புதான்.. ஸாரி.." என்று திருநங்கையிடம் பிரம்படி வாங்கிய இளம்பெண் வீடியோ ஒன்றில் பேசி உள்ளது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயிலில் உள்ளது.. இங்கு அருள்வாக்கு சொல்பவர் திருநங்கை மதுர.. இவரது உண்மையான பெயர் ஐயப்பன்.. ஆனால் மதுர என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார்.

  குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை, பேய், பில்லி, சூனியம் எதுவாக இருந்தாலும் சுற்றுவட்டார மக்கள் இவரிடம்தான் வருவார்கள்.. இவரது பேச்சை சிலர் நம்பவும் செய்கின்றனர்.. அந்த பேச்சை வீடியோவாக எடுத்து, யூடியூடிப்பில் இந்த திருநங்கை தனக்குதானே விளம்பரம் செய்தும் வருகிறார்.

  ஐயப்பன்

  ஐயப்பன்

  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, பெற்றோர் இங்கு அழைத்து வந்தனர். அப்போதுதான், ஐயப்பன் என்ற திருநங்கை, பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அது சம்பந்தமான வீடியோவில், அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும் துன்புறுத்தினார் திருநங்கை.

  பிரம்படி

  பிரம்படி

  வலி தாங்க முடியாமல் அலறி துடித்த இளம்பெண், இறுதியில் தனக்கு பேய் பிடித்ததாக பொய் சொன்னதாக ஒப்புக் கொள்கிறார். இதற்கு பின்னரும் "என்கிட்டயே பொய் சொல்லுவியா" என்று அந்த பெண் மீண்டும் காட்டுத்தனமாக அடிக்கிறார்.. இறுதியில் கற்பூரம் கொண்டு சத்தியம் செய்து, காதலனை மறக்க சொல்கிறார் அந்த திருநங்கை சாமியார்.. அந்த பெண்ணும் சரி என்று சத்தியம் செய்கிறார்.. இப்படி ஒரு வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

  நடிப்பு

  நடிப்பு

  இப்போது இதைவிட ஒரு அதிர்ச்சி சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை மீண்டும் இதே இடத்துக்கு அழைத்து வந்து, பேய் பிடித்ததாக நடித்ததாலேயே கோபத்தில் அடித்ததாகவும், மற்றபடி திருநங்கை சாமியார் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒப்புக் கொள்ளுமாறு பேச வைத்து, அதையும் வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார் மதுர.

  ஸாரி.. தப்புதான்

  ஸாரி.. தப்புதான்

  சம்பந்தப்பட்ட பெண் வீடியோவில் பேசும்போது, "போன வாட்டி இந்த கோயிலுக்கு வந்தோம்.. அப்போ நான் முடியை விரிச்சு போட்டுட்டு.. ஆடிட்டு பாடிட்டு.. அப்படி இப்படி பண்ணிட்டு இருந்தேன்.. அப்போ அவங்களுக்கு கோபம் வந்து என்னை அடிச்சிட்டாங்க.. அப்பறம், நான் லவ் பண்ணேன்னு சொன்னேன்... ஒத்துக்கவே இல்லை.. ஆனா மனசார ஒருத்தரை விரும்பினேன்.. வீட்டில சொன்னா, அடிப்பாங்களோன்னு பயந்து எதுவுமே சொல்லாம இருந்துட்டேன்.. இப்போ மறுபடியும் இங்கே கூட்டிட்டு வந்திருக்காங்க.. நான் லவ் பண்ணது உண்மைதான்.. நான் பண்ணது தப்புதான்.. அவங்களை கஷ்டப்படுத்தி இருக்கக்கூடாது.. அவங்க பயப்படற மாதிரி நான் செஞ்சிருக்க கூடாது... ஸாரி..." என்று மன்னிப்பு கேட்கிறார்.

  பரபரப்பு

  பரபரப்பு

  இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.. அருள்வாக்கு எனும் பெயரில் இவர் ஒருவர் மட்டும் பாதிக்கப்படவில்லை... இவரை போல பல இளம் பெண்களும் பாதிக்கப்பட்டுதான் வருவதாக சொல்லப்படுகிறது.. நாகரீகமும், தொழில்நுட்பமும் வளர்ந்து கிடக்கும் நிலையில், இன்னமும், பேய், பில்லி, சூனியம் என்று மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை தடுத்து நிறத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

   
   
   
  English summary
  young woman gives explanation for her ghost drama and transgender samiyar, this video goes viral on socials
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X