சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Cauvery River Flood : கரைபுரண்டோடும் வெள்ளம்..மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு- வீடியோ

    சேலம்: காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மேட்டூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.

    ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

    ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

    இதனால் கபிணி, கிருஷ்ணராஜசாகர், பவானி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் பாயும் வெள்ளத்தால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அணைக்கு

    அணைக்கு

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு தற்போது வினாடி 5,500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அது போல் மேட்டூர் அணைக்கும் வினாடிக்கு 5.097 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒரே நாளில் 3 அடி உயர்வு

    ஒரே நாளில் 3 அடி உயர்வு

    அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 57.16 அடியாக உயர்ந்துள்ளது.

    கோட்டையூர்

    கோட்டையூர்

    இந்த நிலையில் மேட்டூர் நீர்தேக்க பகுதியான கோட்டையூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Heavy rains in Karanata results dams water level increases. People are warned for flood may arises in Mettur dam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X