• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

புஷ்பா புருஷன்கள்.. "முதலிரவு"க்கு முன்னாடியே நடந்த சம்பவம்.. அலறிய மாமியார்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சேலம்: புஷ்பா மீதுள்ள காதலால் மொத்தம் 5 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார் தினேஷ்.. கடைசியில்தான் விஷயமே வெளியேவந்தது.

சேலம் இரும்பாலையை சேர்ந்தவர் தினேஷ்.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)... 35 வயதாகிறது.. இவர் ஒரு பட்டதாரி.. 35 வயதாகியும் திருமணமாகவில்லை..

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

எங்கெங்கோ தேடியும் மணமகளும் கிடைக்கவில்லை... 3 மாதங்களுக்கு முன்பு புரோக்கர் ஒருவர் தினேஷின் பெற்றோரை சந்தித்து பேசினார்.

புஷ்பா

புஷ்பா

"கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் புஷ்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 27 வயதாகிறது.. நம்ம இனத்தை சேர்ந்த பெண்தான்.. ரொம்ப அழகாக இருப்பார்.. அம்மா, அப்பா இல்லாத பெண்.. சித்தி, அத்தை, மாமாவுடன் தங்கி உள்ளார்... அந்த பெண், உங்க மகனுக்கு பொருத்தமாக இருப்பார்.. கல்யாணம் செய்துவிடலாம்" என்று ஆசை வார்த்தைகளை சொல்லி உள்ளார்.

 புரோக்கர்

புரோக்கர்

இதை கேட்டு தினேஷூக்கு பெருத்த நம்பிக்கை வந்துவிட்டது.. அதனால், பெற்றோருடன் சூளகிரிக்கு கிளம்பி போனார்.. அங்கு புஷ்பாவை பார்த்ததுமே தினேஷுக்கு மிகவும் பிடித்து விட்டது.. கட்டினால்தான் புஷ்பாவைதான் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட தினேஷ், புஷ்பாவுக்கு நகைகளை வாங்கி தந்தார்.. இந்த நேரம் பார்த்து ஒன்றரை லட்சம் தனக்கு கமிஷனாக தந்து விட வேண்டும் என்று புரோக்கர் கேட்டள்ளார்.. புஷ்பா மீதிருந்த காதலால், அந்த பணத்தை தருவதற்கு தினேஷூம் ஒப்புக் கொண்டார்.

 மணப்பெண்

மணப்பெண்

இறுதியில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் புஷ்பாவுக்கும், தினேஷூக்கும் திருமணம் நடந்து முடிந்தது.. திருமணத்தை முறைப்படி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதற்காக, பெண்ணின் ஆதார் கார்டு வேண்டும் என்று தினேஷ் அம்மா கேட்டார்.. அதற்கு புஷ்பா, கார்டு எடுத்து வரவில்லை என்றார்.. எப்போதுமே ஆதார் கார்டு கையில் வைத்திருக்க வேண்டுமே? ஏன் படித்த பெண் இப்படி இருக்கிறார்? என்று தினேஷின் அம்மா சந்தேகம் ஏற்பட்டது.

 ஆதார் கார்டு

ஆதார் கார்டு

இதனிடையே, தற்செயலாக புஷ்பாவின் ஹேண்ட்பேக்கை எடுத்து பார்த்துள்ளார் தினேஷின் அம்மா.. அதில், ஒரு ஆதார் கார்டு இருந்தது.. அதில், புஷ்பாவின் பெயர் மற்றும் அவரது கணவர் பெயர் கோவிந்தராஜ் என்று இருப்பதை இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார்... கோயில் என்றுகூட பார்க்காமல் அலறினார்.. உடனே அங்கிருந்தோர் அனைவருமே அந்த ஆதார் கார்டை வாங்கி பார்த்தனர்.

புஷ்பா

புஷ்பா


ஆனால் அதற்குள் பெண்ணின் சித்தி, மாமா, அத்தை என எல்லாருமே எஸ்கேப் ஆகியிருந்தனர்.. முதலில் எஸ் ஆனது ஒன்றரை லட்சம் வாங்கி கொண்ட அந்த புரோக்கர்தான்.. கடைசியில் கோயில் மண்டபத்தில் புஷ்பா மட்டும் தனியாக சிக்கினார்.. அவரிடம் மொத்த பேரும் சேர்ந்து விசாரணை நடத்தினர்.. புஷ்பா பேச பேச அனைவரும் விக்கித்து நின்றனர்.

 எழுதி தந்தார்

எழுதி தந்தார்

"எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. புரோக்கர்தான் அப்படி சொல்ல சொன்னார்.. அவர்தான் என்னை கல்யாண பெண்ணாக நடிக்க சொன்னார்.. என்னை மன்னித்துவிடுங்கள்... உங்கள் மகனின் வாழ்க்கையில் எந்த விதத்திலும் குறுக்கே வர மாட்டேன்" என்றார்.. அத்துடன், அதே கோயில் வாசலிலேயே 50 ரூபாய் பத்திரத்தில் தான் சொன்னதை எல்லாம் எழுத்துப்பூர்வமாக எழுதியும் தந்தார் புஷ்பா. ஆனாலும், குடும்பத்தினருக்கு ஆத்திரம் தீரவில்லை.. புஷ்பாவை அழைத்துக் கொண்டு இரும்பாலை ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தனர்..

இரும்பாலை

இரும்பாலை

அதற்கு போலீசாரோ, கல்யாணம் நடந்த இடம் திருச்செங்கோடு, பெண்ணின் வீடு சூளகிரி.. இதை நாங்க எப்படி விசாரிப்பது? என்று கேட்டனர்.. அத்துடன், குடும்பத்தினரே பேசி இது பற்றி முடிவெடுத்து கொள்ளுங்கள்.. முதலிரவு நடந்திருந்தால், உங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களும் காணாமல் போயிருக்கும்... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என நினைத்துக்கொள்ளுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.

முதலிரவு

முதலிரவு

இதையடுத்து குழம்பிப் போன பெற்றோர், புஷ்பாவுடன் சூளகிரிக்கு சென்றனர். அங்கு புஷ்பாவின் வீட்டில் இருந்தவர்களோ, "எங்களுக்கு யாரையும் தெரியாது" என்று சொன்னார்கள்.. இதனால் புஷ்பாவை தினேஷ் குடும்பத்தினர் அங்கேயே விட்டுவிட்டு வந்து, மறுபடியும் இரும்பாலை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஓடிப்போன அந்த புரோக்கர், சித்தி, மாமா, அத்தை ஆகியோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இதில் ஒரு கொடுமை என்னவென்றால், புஷ்பா மீதுள்ள காதலால், இந்த கல்யாணத்திற்காக தினேஷ் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளாராம்.

 புஷ்பா புருஷன்கள்

புஷ்பா புருஷன்கள்

அதைவிட இன்னொரு ஷாக்கிங் செய்தியை போலீசார் சொல்கிறார்கள்.. புஷ்பா குடும்பமே ஒரு மோசடி கும்பலாம்.. யாருக்கெல்லாம் ரொம்ப வருடமாக கல்யாணம் நடக்கவில்லையோ, அவர்களையே குறிவைத்து இப்படி நகை, பணத்தை மோசடி செய்து வருவதுதான் இவர்களின் பிரதான வேலையாம்.. இதுவரை அந்த புஷ்பா, 3 பேரை கல்யாணம் செய்துவிட்டாராம்.. 4வதாக புஷ்பாவுக்கு வாக்கப்பட்டவர்தான் தினேஷ்..!

English summary
how did young woman marries four and what happened in salem actutally4 பேரை திருமணம் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X