• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பேஸ்புக்கில் 50 ஆண் நண்பர்கள்.. திருச்சி நபருடன் கள்ளக்காதல்.. ஷாலினி அழகை வர்ணித்த 49 பேர்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் கணவனை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணுக்கு முகநூலில் 50 ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக விசாரணையில் பகீர் தகவல் கிடைத்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நாடகம் அம்பலமாகியுள்ளது.

சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (39) வாழையிலை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (22). இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணிமருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி

நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல்

நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல்

இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கணவரை தாக்கிவிட்டு சென்று விட்டதாக கூறி வெளியே ஓடி வந்த மனைவி ஷாலினி கூச்சல் எழுப்பியுள்ளார். தனது கணவரை காப்பாற்றுமாறு அங்கிருந்தவர்களிடம் அழுது தீர்த்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸுக்கு ஷாலினி போன் செய்தார்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இதையடுத்து சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சோதித்து பார்த்துவிட்டு பிரபு இறந்திருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீஸில் தகவல் சொல்லுமாறும் அவர்கள் கூறினர். இதையடுத்து ஷாலினி தனது உறவினர்களின் உதவியுடன் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நள்ளிரவில் கொள்ளையர்கள்

நள்ளிரவில் கொள்ளையர்கள்

போலீஸில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தனது தாலி செயினை பறிக்க முயன்ற போது அதை தடுத்த கணவரை தாக்கிவிட்டதாகவும் இதனால் கழிவறையில் மயங்கிய நிலையில் கணவர் இருந்ததை அடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்ததாகவும் அவர்கள் வந்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதாக கூறி சென்றதாகவும் கதறியுள்ளார்.

போலீஸார் பிரேத பரிசோதனை

போலீஸார் பிரேத பரிசோதனை

இதையடுத்து பிரபுவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஷாலினியின் செல்போனை பறித்து விசாரணை

ஷாலினியின் செல்போனை பறித்து விசாரணை

இதையடுத்து ஷாலினியின் செல்போனை கைப்பற்றி விசாரித்தனர். அதில் ஷாலினி தினமும் 20 பேர் முதல் 30 பேரிடம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. ஷாலினியின் பேஸ்புக்கை பார்த்தபோது 50 ஆண்களுடன் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஷாலினியை பிடித்து போலீஸார் விசாரித்த போதுதான் முகநூல் நண்பருக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

ஸ்மார்ட் போன் வாடையே தெரியாது ஷாலினி

ஸ்மார்ட் போன் வாடையே தெரியாது ஷாலினி

ஷாலினி பிரபுவுக்கு அக்காள் மகள் ஆவார். திருமணத்திற்கு முன்பு கஷ்டத்தில் இருந்த ஷாலினியின் குடும்பத்திற்கு முதலில் ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த போனே கதி என கிடந்த ஷாலினி பேஸ்புக்கில் 50 ஆண் நண்பர்கள் வரை சகவாசம் வைத்திருந்ததாக தெரிகிறது. அவ்வாறு பழகிய ஆண் நண்பர்களில் திருச்சி உறையூரை சேர்ந்த நண்பர் காமராஜோ ஷாலினியின் வீடு தேடி வரும் அளவுக்கு நெருங்கி பழகியுள்ளார். மற்றவர்கள் ஷாலினியின் அழகை வர்ணிப்பதோடு சரியாம்.

கணவன் வெளியூர் சென்றால் கள்ளக்காதலுடன் லூட்டி

கணவன் வெளியூர் சென்றால் கள்ளக்காதலுடன் லூட்டி

பிரபு வெளியே செல்லும் நாட்களில் அவ்வப்போது அந்த திருச்சி ஆண் நண்பர், ஷாலினியுடன் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பிரபுவின் காதுகளுக்கு எட்டியது. இதனால் அவர் செல்போனை பறித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது. மேலும் கணவருக்கு தெரியாமல் ஏற்கெனவே வைத்திருந்ததை விட காஸ்ட்லி போனை வாங்கி அதன் மூலம் ஆண் நண்பர்களுடன் தொடர்பை நீடித்துள்ளார். இதனால் தினமும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட வந்தது.

கணவரையே எதிர்த்து பேசிய ஷாலினி

கணவரையே எதிர்த்து பேசிய ஷாலினி

இதனால் பிரபுவை ஷாலினி எதிர்த்து பேச தொடங்கியதும் பல நாட்கள் வீட்டிற்கு வராமல் கடையிலேயே பிரபு தங்கியுள்ளார். இதையடுத்து ஷாலினியை தீர்த்து கட்ட திருச்சியில் உள்ள கள்ளக்காதலனிடம் ஷாலினி தெரிவித்துள்ளார். ஒரு வாரமாக பிரபுவிடம் தான் திருந்தி விட்டதாக ஷாலினி நடித்துள்ளார். இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவு திட்டமிட்டபடி கள்ளக்காதலனை வரவழைத்து விட்டு பிரபுவின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்து விட்டு கள்ளக்காதலனை நைசாக வெளியே அனுப்பிவிட்டு வெளியே வந்து நல்லவர் போல் கூப்பாடு போட்டுள்ளார்.

ஷாலினியை கைது செய்த போலீஸார்

ஷாலினியை கைது செய்த போலீஸார்

இதையடுத்து ஷாலினியை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் முகநூல் காதலன் காதலனை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் 50 ஆண் நண்பர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் போலீஸார். இந்த கொலையில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

முகநூலில் ஆண் நண்பர்கள்

முகநூலில் ஆண் நண்பர்கள்

ஒன்றரை வயதில் குழந்தையை வைத்து கொண்டு ஷாலினி செய்த காரியத்தால் தந்தையும் இல்லாமல் தாயும் சிறைக்கு செல்வதால் அந்த குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சமூகவலைதளங்களை தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்துவதுதான் நல்லது. அதைவிட்டுவிட்டு இது போல் சிக்கலில் சிக்கும் அளவுக்கு அந்த முகநூலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை தவிக்க விட்டுவிட்டு கட்டிய கணவரையும் கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லும் ஷாலினியின் செயலை கண்டு அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

English summary
Husband murdered by wife as she has 50 boyfriends in her facebook. A Shocking news in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X