சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்!

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    J Deepa supports ADMK Alliance | அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா ஆதரவு

    சேலம்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கிறது. அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையும் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது.

    இதற்கான விருப்பமனுக்களையும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பெற்றுவந்தார். அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம். தனியாக போட்டியிட போகிறோம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த முடிவை தற்போது ஜெ.தீபா கைவிட்டுள்ளார்.

     ஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலையா.. கரூர் காங். வேட்பாளர் யார்.. பரபரக்கும் சஸ்பென்ஸ் ஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலையா.. கரூர் காங். வேட்பாளர் யார்.. பரபரக்கும் சஸ்பென்ஸ்

    பேட்டி

    பேட்டி

    அதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார். சேலத்தில் நடந்த பேரவை பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜெ. தீபா விளக்கம் அளித்துள்ளார்.

    வருத்தம் அடைவார்கள்

    வருத்தம் அடைவார்கள்

    அவர் தனது பேட்டியில், நான் தனியாக போட்டியிடுவது குறித்து பலர் என்னிடம் பேசினார்கள். தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருத்தம் கொள்வார்கள். அதிமுகவின் நிஜமான தொண்டர்கள் வருத்தம் அடைவதை ஏற்க முடியாது.

    அழைப்பு

    அழைப்பு

    அதிமுக தலைமை என்னை அழைத்தால் நான் அழைப்பை ஏற்றுக்கொள்வேன். நான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

    என்ன

    என்ன

    எந்த பதவியும் எனக்கு தேவையில்லை; அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது. அதிமுகவுடன் எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையை வருங்காலத்தில் இணைக்க வாய்ப்புள்ளது, என்று ஜெ. தீபா தனது முடிவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    I will support AIADMK in this Lok Sabha election says MGR Amma Deepa Peravai chief J Deepa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X