சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த வெறி பிடிச்ச நாயை பிடிக்க போறீங்களா இல்லையா?.. அலறும் சேலம்.. 50 பேர் காயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்த வெறி நாயை பிடிக்க போறீங்களா இல்லையா?அலறும் சேலம்-வீடியோ

    சேலம்: ஒத்த நாய் வெறிபிடிச்சு போய் துரத்தி துரத்தி கடித்ததில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்களிடம், நாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று சொன்னதால், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் ஆத்திரம் அடைந்து உள்ளனர்.

    சேலம் மாநகரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் சிறுவர் - சிறுமியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

    உடனே இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகத்திடம் எத்தனையோ முறை புகார்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    ரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி ரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

    50 பேர் படுகாயம்

    50 பேர் படுகாயம்

    இந்த நிலையில் சேலம் களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சபட்டி உள்ளிட்ட பகுதியில் இன்று காலை வெறிபிடித்த நாய் ஒன்று நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. ஒரே ஒரு நாய் சாலையில் நடந்து சென்றவர்கள், கடையில் நின்று கொண்டிருந்தவர்கள், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. இதனால் சுமார் 50 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட உடம்பு முழுவதம் ரத்தம் கொட்ட தொடங்கியது.

    முதலுதவி

    முதலுதவி

    இவர்கள் அப்படியே ரத்தம் சொட்ட சொட்ட, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். பலர் அதிக காயமடைந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு அங்கு முதலுதவி மட்டும் செய்த டாக்டர்கள், நாய் கடிக்கான மருந்துகள் இல்லை என்று சொல்லிவிட்டதாக தெரிகிறது.

    மருந்து இல்லையாம்

    மருந்து இல்லையாம்

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயே முற்றுகையிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது, "நாய் கடித்து ரொம்ப நேரம் வலியால் துடித்து காத்து கொண்டிருக்கிறோம். 2 மணி நேரத்துக்கு மேலாகியும் சிகிச்சையே தரவில்லை.

    நாயை பிடிக்கவில்லை

    நாயை பிடிக்கவில்லை

    நாய் கடித்து 50 பேர் பாதிக்கப்பட்டும் இதுவரைக்கும் அந்த நாயை யாருமே பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று பாதிக்கப்பட்டவர்களே குற்றஞ்சாட்டுகின்றனர். இப்படி ஒரே நேரத்தில் ஒரே ஒரு நாய் 50-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறி ஆஸ்பத்திரி வரைக்கும் வந்துள்ள சம்பவம் சேலம் நகரை உலுக்கி உள்ளது.

    மாவட்ட செய்தியாளர் சுதன்...

    மாவட்ட செய்தியாளர் சுதன்...

    சேலம் மாநகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி கடித்து வந்த நாயை பட்டை கோயில் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடித்து கொன்றனர்..

    English summary
    More than 50 people were injured by bitting rabies and admitted in Salem Govt Hospital for treatment
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X