For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகள் கண்ணீர்.. ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லையாமே

Google Oneindia Tamil News

மேட்டூர்: குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள பாரம்பரியமாக, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தொடர்ச்சியாக 8 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மேட்டூர் அணையில் 85 முதல் 90 டிஎம்சி அளவிலான தண்ணீர் இருந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட முடியும் என்ற நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் வெகுகுறைவாக 48. 29 டிஎம்சி குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

ஒருவேளை பெரும்பான்மை மட்டும் கிடைக்காவிட்டால்.. பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இவர்தான்! ஒருவேளை பெரும்பான்மை மட்டும் கிடைக்காவிட்டால்.. பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இவர்தான்!

போதிய நீர் இல்லை

போதிய நீர் இல்லை

முன்னதாக, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி இருந்தால், தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகா திறந்து விடும் என்றும், தற்போது, கர்நாடகா நீர்தேக்கங்களிலும் போதிய நீர் இல்லை எனவும் கர்நாடகா பொதுப்பணித் துறை அமைச்சரான ரேவண்ணா தெரிவித்தார்.

காவிரி நதிநீர் மேலாண்மை

காவிரி நதிநீர் மேலாண்மை

இதனிடையே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. அதனைத் தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை அணையத்தின் கூட்டம் இந்த மாதம் 28 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக அரசு வஞ்சிக்கிறது

அதிமுக அரசு வஞ்சிக்கிறது

குறுவை சாகுபடிக்காக காலதாமதம் இன்றி ஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறந்து விடாமல் அதிமுக அரசு வஞ்சித்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி போராட்ட சூழலை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கின்ற செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

கடல் நீர்

கடல் நீர்

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் கல்லணை வழியாக கடைமடை பகுதியான நாகைக்கு வந்து சேர்கிறது. அதனை நம்பி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாகப்பட்டினம் தேவநதி பாசன வாய்க்கால்கள் வழியாக கடல் நீர் உட்புகுந்து வருகிறது. அதனால் கடைமடை பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Kuruvai Cultivation: It is not possible to open water from Mettur Dam on June 12
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X