சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் தொழில்வளம் பெருக்கும்.. முதல்வர் எடப்பாடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Salem 8 Way Project : 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா?- வீடியோ

    சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான புறவழிச்சாலையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால், தொளசம்பட்டி சாலையில் ரூ5.25 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பாலங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

    It is the farmers welfare government.. CM Edapadi Palaniswami

    தொடர்ந்து விழாவில் பேசிய அவர் சாலை உள்கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. எந்த மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதோ அங்கு தொழில்வளம் பெருகும் என்றார்.

    அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமானால் உள்கட்டமைப்புகள் சிறந்ததாக இருக்க வேண்டும். மேலும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்

    பூ விவசாயிகள் தமிழகத்திலேயே உரிய விலையில் பூக்களை விற்பனை செய்யலாம் என்ற முதல்வர் பூக்களை விவசாயிகள் ஒருமாதம் வரை குளிர்பதன கிடங்கில் இலவசமாக தேக்கி வைக்கலாம் என குறிப்பிட்டார் இது விவசாயிகளுக்கான அரசு விவசாயிகளின் நலன்களை பேணி பாதுகாப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்

    ரூ.2,000 கோடியில் தலைநகர் சென்னைக்கு அருகே உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தொழில்வளத்தை பெருக்குவதற்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிமராமத்து பணிகள் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy opened a Bypass road worth Rs 25 crore in Salem district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X