சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14 நாய்களை வளர்த்த ஜெயலலிதா.. ஜூலி இறந்தபோது என்ன ஆச்சு தெரியுமா? ஜெ. மறுபக்கம்.. மனம் திறந்த ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் பேசியபோது ஒரு சுவாரசிய தகவலை வெளியிட்டார். அவரது பேச்சை பாருங்கள்:

6 அறிவு ஜீவன்கள் என்றும், வாயில்லா ஜீவன்கள் என்றும் நாம் அன்பு காட்டும் கால்நடைகளை செல்வவடிவாக பார்த்து மக்கள் மதித்தனர். தமிழக மக்கள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தங்கள் குடும்ப உறுப்பினர் போலவே பாவித்தனர். இதை, ஒரு கடமையாகவே கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள், மரங்களுக்கும் சொந்தமானது என்று நம்முடைய தமிழர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜிக்கு ஏதுங்க நேரம்... வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் போதல... கொதிக்கும் உ.பி.க்கள் செந்தில்பாலாஜிக்கு ஏதுங்க நேரம்... வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் போதல... கொதிக்கும் உ.பி.க்கள்

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம்

மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். ஆனால் அவை இல்லாத உலகில் மனிதர்கள் ஒருபோதும் வாழமுடியாது என்றார், பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி. வேதகாலத்தில் இறைவனிடமிருந்து பெறப்படும் வரமாக விலங்குகள் பார்க்கப்பட்டன. பசுக்களையும், குதிரைகளையும் துன்புறுத்தக்கூடாது என வேதங்கள் கூறுகின்றன. கால்நடைகள் மீது அன்பு காட்டுவதும், அவற்றின் மீது அன்பு வைப்பது இறைவன் குணம். பூவுலகை காப்பாற்ற அவதாரம் எடுத்த ஸ்ரீகிருஷ்ணர், பசுக்கூட்டத்தை பாதுகாக்கும் தலைவராக இருந்து அருள் பாலித்தார்.

ஏசுநாதர், முகமது நபி, புத்தர்

ஏசுநாதர், முகமது நபி, புத்தர்

ஏசுபிரான் நல்ல மேய்ப்பராக இருந்து, தன்னிடமிருந்த 100 ஆடுகளில் ஒன்று காணாமல் போனாலும் உறக்கமின்றி இருந்தார். மிருகங்களை பாதுகாப்போருக்கு இறைவன் நற்கூலி அளிப்பார் என்றால், முகமது நபி. பலி கொடுக்க வைத்த ஆட்டின் கயிற்றை அவிழ்த்து தனது கழுத்தில் வைத்து பலியாக தயாரானார் புத்தர். பசுவிற்காக மகனை தேர் சக்கரத்தில் வைத்தார் மனுநீதி சோழன். புறாவுக்காக தசையை அறுத்துக் கொடுத்தார், சிபிச் சக்கரவத்தி.

14 நாய்கள்

14 நாய்கள்

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா 14 செல்ல நாய்களை வளர்த்து வந்தார். ஒவ்வொன்றையும் தனது குடும்ப உறுப்பினராக பாவித்துதான், செல்ல பிராணிகளிடம் அன்பு காட்டினார். முதல்வராக அவர் இருந்தபோது, ஐதராபாத்திலிருந்து, டெல்லி செல்ல பயண திட்டம் இருந்தது. ஆனால் வீட்டில் ஜூலி என்ற நாய் இறந்துவிட்டதால், டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, சென்னை திரும்பினார். அந்த நாயை கூடவே இருந்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தவர். அந்த அளவுக்கு விலங்குகள் மீது பாசம் வைத்திருந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா திட்டங்கள்

ஜெயலலிதா திட்டங்கள்

இதன் அடிப்படையில்தான் கால்நடைகள் செழிக்க வேண்டும், கிராமப் பொருளாதாரம் உயர வேண்டும், கிராமப்புற பெண்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்றும் மூன்று நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தையும் ஜெயலலிதா வெற்றிகரமாக செயல்படுத்தினார். யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம்கள் நடத்தினார்.

ஜெ. வழியில் எடப்பாடி பழனிச்சாமி

ஜெ. வழியில் எடப்பாடி பழனிச்சாமி

ஜெயலலிதாவின் நடவடிக்கை தொடர்ச்சியாகத்தான், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் ஆராய்ச்சி நிலைய வளாகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஓபிஎஸ் பேசினார். இரும்பு பெண்மணியாக அறியப்படும் ஜெயலலிதாவின், மனிதாபிமானம், விலங்குகள் மீதான நேயத்தின் மறுபக்கத்தை வெளியிடும் விதமாக ஜூலி என்ற நாய் இறந்த சம்பவத்தை வெளிப்படுத்தி நெகிழ்ந்துள்ளார் ஓபிஎஸ்.

English summary
Former CM Jayalalitha has affection towards animals, Dy CM OPS explained an event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X