சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொன்னபடி செய்வாங்க.. மக்கர் பன்னா தூக்கி எறிஞ்சிடலாம்.. பிரசாரத்தில் கமல் வாக்குறுதி!

Google Oneindia Tamil News

சேலம்: எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு மக்கள் பணியில் ஈடுபடவில்லை எனில் பதவியைப் பறித்து விடுவோம் என சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பேசினார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் எங்கும் குடிநீர்ப் பற்றாகுறை உள்ளது. குடிநீருக்காக மக்கள் சுமார் 7 கிலோமீட்டர் அலைய வேண்டியுள்ளது. ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

ராஜினாமா

ராஜினாமா

நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வரும், எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு கடந்த நாடாளுமன்ற உறுப்பினர் செய்ய தவறிய அனைத்தையும் செய்து தருவார். அவ்வாறு இரண்டு வருடத்தில் அவர் செய்ய தவறினால் அவருடைய ராஜினாமா கடிதத்தை உங்களிடம் பெற்றுக் கொடுப்போம்.

எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.. ஆதரவு கேட்ட கமலுக்கு ரஜினியின் நாசுக்கான பதில்எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.. ஆதரவு கேட்ட கமலுக்கு ரஜினியின் நாசுக்கான பதில்

அறிக்கை

அறிக்கை

தற்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுவார்கள். எனவே மக்கள் நீதி மையத்தின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்த்து அனைவரும் வாக்களியுங்கள். செய்ய முடியும் என்பதையே நாங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும்.

முதல் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகள் விவரம்

இடையூறு

இடையூறு

எனவே இளைஞர்கள் அதை புரிந்து கொண்டு வரும் ஏப்ரல் 18 அன்று வாக்களிக்க வேண்டும். அன்றைய தினம் தமிழகத்தை மாற்றுவதற்கான முதல்படி. தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் சிறிது நேரத்திலேயே தனது பேச்சை முடித்து விட்டு செல்ல முயன்றார்.

வாய்ப்பு

வாய்ப்பு

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் கமலிடம் கேள்வி கேட்க முயன்றார். ஆனால் அவர் கேள்வியை கேட்காமல் தொடர்ந்து ஒரு நிமிடம் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதியை விட்டு சென்றார். அவர் சென்ற பிறகு அந்த இளைஞர் கல்வி மற்றும் மருத்துவத்தில் இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

English summary
Kamal Haasan in Salem says that if a MP from Makkal Needhi Maiam not doing well, then his/her resignation letter will be sent directly to the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X