சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே.. வருந்திய சேலம் பெண்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சேலம்: தனியார் தொலைகாட்சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக அமைச்சர் மா சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தது குறித்து பெண் பயனாளி ஒருவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லையே என தற்போது வருந்துவதாக தெரிவித்தார்.

Recommended Video

    சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிறுமி... மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய முதல்வர்.. நெகிழ்ச்சி வீடியோ

    திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் இந்த ஆட்சி திமுகவுக்கு வாக்களிக்கத்தவர்களுக்கு மட்டும் அல்ல வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்யும் ஆட்சியாக இருக்கும் என்றார்.

    தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!

    அது போல் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய ஸ்டாலின் தற்போது திமுகவுக்கு ஏன் வாக்களிக்காமல் போனோம் என கவலைக் கொள்ளும் அளவுக்கு எங்கள் ஆட்சியின் திட்டங்கள் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த நிலையில் தனியார் தொலைகாட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் பெண் ஒருவர் வைத்த கோரிக்கைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உடனடியாக நடவடிக்கை எடுத்தது குறித்து பயனாளி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜநந்தினி. இவருக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார்.

    கோவை மருத்துவமனை

    கோவை மருத்துவமனை

    ஜனனி, கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து தாய் ராஜநந்தினி தனது சிறுநீரகத்தை ஜனனிக்கு கொடுத்துள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே ராஜநந்தினி ஜனனிக்கு கொடுத்த சிறுநீரகம் வேலை செய்யவில்லை என மருத்துவர்கள் கூறியதால் ராஜநந்தினிக்கு இடி விழுந்தது போல் இருந்தது.

    தவித்த மனைவி

    தவித்த மனைவி

    இவரை கணவரும் கைவிட்டதால் பெண் குழந்தையோடு பரிதவித்து வந்த ராஜநந்தினி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்த போது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள் என பதில் வந்தது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தார்.

    அமைச்சர் பேச்சு

    அமைச்சர் பேச்சு

    தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ராஜநந்தினி பேசிய வீடியோ ஒளிபரப்பானது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ராஜநந்தினியை தொடர்பு கொண்டு பேசி தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் மா சுப்பிரமணியன், ராஜநந்தினியை தொடர்பு கொண்டு ஜனனியை சென்னைக்கு அழைத்து வர கூறினார்.

    வருந்துவதாக பெண் நெகிழ்ச்சி

    வருந்துவதாக பெண் நெகிழ்ச்சி

    அதன் பேரில் அங்கு சென்ற அவர்களுக்கு சென்னையில் எங்கு தங்குவது என தெரியவில்லை. இதையடுத்து அவர்களை சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்க வைத்து மருத்துவர்கள் அருகே இருந்து ஜனனியை பார்த்துக் கொள்ளும் வகையில் திமுக அரசு உதவி செய்ததாக கூறிய ராஜ நந்தினி, திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என இப்போது வருந்துகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    English summary
    Kidney transplanted girl gets medical help from DMK Government for further treatment. That girl belongs to Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X