சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்

Google Oneindia Tamil News

Recommended Video

    28-ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்- வீடியோ

    சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் வருகிற 28-ந்தேதி வெளியிட உள்ளதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

    எப்போதும் அரசியல் களத்தில் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என அறிவித்து அதிரடி காட்டுபவர் டிடிவி தினகரன். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியை தவிர, மற்ற கட்சிகள் விருப்ப மனு பெற்று ஆலோசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், மக்கள் விமர்சிக்காத சிறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதாக கூறியுள்ள டிடிவி தினகரன், வருகிற 28 ந் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

    எட்டி உதைத்தார்கள்

    எட்டி உதைத்தார்கள்

    சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர், பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தார்கள். கூட்டணி என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் என்று கூறினார்.

    கூட்டணி அமைப்போம்

    கூட்டணி அமைப்போம்

    யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள், பெரிய கட்சிகள் இல்லாமல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அதே நேரத்தில் எங்களுக்கு கூட்டணி எதற்கு, ஜெயலலிதாவின் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    மாபெரும் வெற்றி பெறுவோம்

    மாபெரும் வெற்றி பெறுவோம்

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். வருகிற 28-ந்தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம் என்றார்.

    தேமுதிகவுடன் கூட்டணி?

    தேமுதிகவுடன் கூட்டணி?

    மக்கள் விமர்சிக்காத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்றும் முதல்வர் வேட்பாளர் என்றும், மாற்றம், ஏமாற்றம் என்று அறிவித்து போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்தனர் என்றும் அவரே வெற்றி பெறாத நிலையில் பெரிய கட்சி என்று நினைக்கிறார்கள். தேமுதிகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்றும் கூறினார்.

    English summary
    TTv Dhinakaran has announced that the list of candidates to contest in the Lok Sabha elections will be released on July 28.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X