சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனநலம் பாதிக்கப்பட்ட மாமியாரை.. காலால் மிதித்தே கொன்ற லாரி டிரைவர்.. நடுங்கும் ஓமலூர்

மாமியாரை மிதித்தே கொன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சேலம்: மனநலம் பாதிக்கப்பட்ட மாமியாரை கழுத்தில் காலால் மிதித்துக் கொன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.. இந்த சம்பவம் ஓமலூரில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பொரசமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன்.. 39 வயதான இவர் ஒரு லாரி டிரைவர்.. மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

lorry driver killed his mother in law near salem

ராமச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது.. தண்ணியை போட்டுவிட்டு வந்தால், தினமும் வீட்டில் தகராறுதான்.. அதனாலேயே மகேஸ்வரி அவரது அம்மா பழனியம்மாள் வீட்டிற்கு சென்றுவிடுவார்.. பழனியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.. கணவரை இழந்தவர்.. இந்நிலையில் ஒருநாள் பழனியம்மாளுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

உடம்பெல்லாம் காயங்கள் இருந்ததை பார்த்ததும், டாக்டர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர்.. கீழே விழுந்து விட்டதாக சொன்னார்கள்.. ஆனால் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து, அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது.. அப்போது மகேஸ்வரியின் குழந்தைகள், எங்க அப்பாதான் பாட்டியை அடிச்சு, கழுத்துல காலால் மிதித்தார்.. பாட்டி செத்து போய்ட்டாங்க" என்று அங்கிருந்தோரிடம் சொல்லவும் விவகாரம் வெடித்தது.

சென்னையில் பல இடங்களில் திடீர் மழை.. வடசென்னையில் கொரோனாவுக்கு இடையே விளையாடும் மழை!சென்னையில் பல இடங்களில் திடீர் மழை.. வடசென்னையில் கொரோனாவுக்கு இடையே விளையாடும் மழை!

மகேஸ்வரிக்கே அப்போதுதான் விஷயம் தெரிந்தது.. உடனடியாக மகேஸ்வரி கருப்பூர் போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து சூரமங்கலம் போலீசார், ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தார்.. அப்போதுதான் அவர் நடந்த சம்பவத்தை சொன்னார்.. குழந்தைகளை மாமியார் அடித்ததால், ஆத்திரமடைந்து, மாமியாரை கீழே தள்ளிவிட்டு காலால் மிதித்தே கொன்றதாக சொன்னார். லாரி டிரைவர் ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
lorry driver killed his mother in law near salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X