சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேட்டூருக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து.. வரும் நாட்களில் 100 அடியை எட்டும் நீர் மட்டம்?

Google Oneindia Tamil News

சேலம்: கர்நாடகாவில் கனமழை கொட்டி வருவதால் அங்கிருக்கும் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உயர்ந்துள்ளது.

Recommended Video

    மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து - வீடியோ

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகாவில் பேய் மழை பெய்து வருகிறது. காவிரி பிறக்கும் இடமான குடகு உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    காலக்கொடுமை- தளர்வு இல்லா லாக்டவுன் குதூகலமா? நேற்று ஒரே நாளில் ரூ189 கோடிக்கு மது விற்பனைகாலக்கொடுமை- தளர்வு இல்லா லாக்டவுன் குதூகலமா? நேற்று ஒரே நாளில் ரூ189 கோடிக்கு மது விற்பனை

    90 ஆயிரம் கனஅடி

    90 ஆயிரம் கனஅடி

    நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 51 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    நீர் மட்டம்

    நீர் மட்டம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது. மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 75. 830 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டூர் அணை நிலவரம். 8 மணி நிலவரம்

    மேட்டூர் அணை நிலவரம். 8 மணி நிலவரம்

    • நீர்மட்டம் 75.830 அடி.
    • நீர்இருப்பு : 37.927 டி.எம்.சி.
    • நீர்வரத்து : வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக உள்ளது.
    • வெளியேற்றம் : வினாடிக்கு 1000 கன அடி
    1000 கனஅடி நீர்

    1000 கனஅடி நீர்

    டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் கொஞ்ச நாட்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Mettur Dam gets 90,000 Cubic feet per second from Karnataka dams. Its water level is 75 feet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X