சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு... ஓடி வந்தாள் காவிரி... அணைக்கு... இன்று வயது 87!!

Google Oneindia Tamil News

மேட்டூர்: தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனத்துக்கு உயிர் கொடுத்து வருவதுடன், 12 மாவட்டங்களுக்கு குடிநீர் அளித்து வரும் மேட்டூர் அணை கட்டப்பட்டு இன்றுடன் 87 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்த அணையை கட்டி முடிப்பதற்கு 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. அணையை காலனல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்ற ஆங்கிலேயே பொறியாளர் கட்டினார். இந்த அணை ஸ்டேன்லி அணை என்றும் அழைக்கப்படுகிறது.

Recommended Video

    16 மணிநேரம் வெள்ளத்தில் சிக்கியிருந்தவரை MI 17-விமானம் மூலம் உயிருடன் மீட்ட IAF

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் தென்னகத்தின் அரிசி கிண்ணம் என்றும் அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதிகளை இன்று உயிர்ப்புடன் வைத்து இருப்பது மேட்டூர் அணைதான். இந்த அணையின் உயரம் 214 அடி, அகலம் 171 அடி. 1925-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. அணையை கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. 1934ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 21 ஆம் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது. அப்போதே அதில் நீரும் நிறுத்தப்பட்டது.

    Mettur dam on the 87th year and its water level today

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மேட்டூர் அணையின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அணை அப்போது வெறும் ரூ. 4.80 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று.

    கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, அதன் நீர் திறந்துவிடும்போது, மேட்டூர் அணையை வந்து சேருகிறது. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை கண்காணித்து வருகிறது.

    இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் மூலம் தமிழகத்தில் 16.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன பெறுகின்றன. மேட்டூர் அணை கடந்த 1990களில் இருந்து பிரபலமானது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்சனை. இதுதொடர்பான பிரச்சனை இருமாநிலங்கள் இடையே பெரிய அளவில் சிக்கல்களை ஏற்படுத்தி, வன்முறைகளையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், மேட்டூர் அணைக்கு காவிரியில் இருந்து நீர் வரத்து இருக்கும் இடங்களில் கர்நாடகா மாநிலம் ஹேரங்கி, கபினி, கிருஷணராஜசாகர், ஹேமாவதி ஆகிய அணைகளைக் கட்டி நீரை தேக்கியது. இதனால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து நீர் வருவது தடைபட்டது. இதுதான பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டது.

    சீனியர்கள்.. ஜூனியர்கள் அக்கப்போர் ஒருபக்கம்.. விரைவில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சீனியர்கள்.. ஜூனியர்கள் அக்கப்போர் ஒருபக்கம்.. விரைவில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

    தற்போது தமிழகத்துக்கு கர்நாடகா மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் 177.25 டி.எம்.சி. அளவுக்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிககளில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவில் பாதிப்பில்லை.

    இந்த ஆண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன கழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 17ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 99.03 அடியாக இருந்தது. ஓரிரு நாளில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் 19ஆம் தேதியன்று 97.94 அடியாக குறைந்தது.

    டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 16,500 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கன அடி வீதமும் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 27 ஆயிரத்து 845 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 99.81 அடியாக உள்ளது.

    English summary
    Mettur dam on the 87th year and its water level today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X