சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண் கொள்ளாக் காட்சி.. நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்!

    சேலம்: மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.

    mettur dam raches its frl

    நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இன்று அது தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட 1 இன்ச்தான் பாக்கி உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 120 அடியை அது எட்டியுள்ளது.

    12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:

    இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 32,00 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 12 மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணை கட்டி 86 ஆண்டுகளாகிறது. இதில் தற்போது 43வது ஆண்டாக அணை நிரம்பியுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக அணை நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு இரண்டரை லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையே திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது நினைவிருக்கலாம். தற்போதும் அதுபோல பெருமளவிலான நீர் திறப்புக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ளதால் உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    செல்ஃபி எடுக்கப்படாது:

    இதற்கிடையே அணை திறந்து விடப்பட்டிருப்பதால் மக்கள் கூட்டம் அலை மோத ஆரம்பித்துள்ளது. வேடிக்கை பார்க்க கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செல்பி எடுக்க கூட்டம் கண்டிப்பாக முயலும் என்பதால் அதெல்லாம் செய்யக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ராமன் எச்சரித்துள்ளார்.

    English summary
    Metuur Dam is reaching its FRL in next 4 hrs, said Salem district collector Raman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X