சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா அட்சய பாத்திரமான காவிரி.. 2-ஆவது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

Google Oneindia Tamil News

Recommended Video

    நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்!

    சேலம்: மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர் தேக்கமானது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 120 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கடந்த 7-ஆம் தேதிதான் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதைத் தொடர்ந்து அந்த அணையிலிருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர் மட்டமும் 119.9 அடியாக இருந்தது.

    இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி.. எல்லாவற்றையும் அவர் பார்த்துப்பார்.. டிரம்ப்இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி.. எல்லாவற்றையும் அவர் பார்த்துப்பார்.. டிரம்ப்

    60 ஆயிரம் கனஅடி

    60 ஆயிரம் கனஅடி

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியிலிருந்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இருப்பு

    இருப்பு

    தற்போது அணையின் இருப்பு 93.758 டிஎம்சியாக உள்ள நிலையில் டெல்டா விவசாயிகளுக்காக 32,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அது போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படும்.

    16 மதகுகள்

    16 மதகுகள்

    இதையடுத்து காவிரி டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16 மதகுகள் வழியாக 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மழைநீருடன் கழிவுநீர்

    மழைநீருடன் கழிவுநீர்

    சேலம் மாவட்டத்தில் 804 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் நகரத்தில் மட்டும் 87 மி.மீ. மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிட்டது.

    English summary
    Mettur Dam reaches 120 feet for the second time, says Public works Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X