சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released

    சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120. 83 அடியை எட்டியதை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி நிலவரப்படி, 60 ஆயிரம் கனஅடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேநேரம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு 94 ஆயிரத்து 798 மில்லியன் கன அடியாக உள்ளது.

    Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காரணமாக தமிழக எல்லையான பில்லிகுண்டுவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 68 ஆயிரம் கனடிநீர் வந்து கொண்டிருந்தது.

    மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த சனிக்கிழமை மதியம் 12.55 மணி அளவில் 120 அடியை அதாவது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் இந்த வெள்ளம் பற்றி கூறுகையில், காவிரி கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படி, அந்தந்த கிராம விஏஓக்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஒரு லட்சம் கனஅடி நீர் வரை காவிரி ஆற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது என்றனர்.

    பயங்கரவாதி மசூத் அசாரை சிறையில் இருந்து ரகசியமாக விடுதலை செய்தது பாக்.? மிகப் பெரிய நாசவேலைக்கு சதி?பயங்கரவாதி மசூத் அசாரை சிறையில் இருந்து ரகசியமாக விடுதலை செய்தது பாக்.? மிகப் பெரிய நாசவேலைக்கு சதி?

    நாமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், சனிக்கிழமை இரவு வெள்ள அபாய எச்சரிக்க விடுத்தார். காவிரி கரையோர கிராமப்புற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய ஊர்களை சேர்ந்த காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் காரணமாக மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லது நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு நாமக்கல் மாவட் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். முக்கொம்பு அணையில் இருந்து திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    English summary
    Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released from dam so Revenue and Disaster Management Departments remained on high alert.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X