சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட்டில் ரூ.6000 எதற்கு?... ஓட்டுக்கு தானே... ஸ்டாலின் விளாசல்

Google Oneindia Tamil News

சேலம்: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என கூறியிருப்பது வாக்குக்காக மறைமுகமாக வழங்கக் கூடிய பணம் தான் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் இன்று அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளிவிழா மலரை வெளியிட்டு, மாவீரன் பொல்லான் சிலையைத் திறந்து வைத்தார்.

MK Stalin Criticized Central Budget Announced Rs. 6000 to Farmers

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, "அருந்ததியர் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் பெற்றுத் தந்தவர் கருணாநிதி என்றும், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அருந்ததியர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

மத்தியில் ஆள்வது மோடி அல்ல. மோடி பிரைவேட் கம்பெனிதான். மோடியின் கவலையெல்லாம் கார்ப்பரேட்டுகளைப் பற்றித் தான் என்றும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என கூறியிருப்பது வாக்குக்காக மறைமுகமாக வழங்கக் கூடிய பணம் தான் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு காலே இல்லை. எப்படி காலூன்ற முடியும் என்றும் விமர்சித்தார். இங்கு பா.ஜ.க ஒருபோதும் காலூன்றவே முடியாது எனவும் தெரிவித்தார்.

English summary
DMK president MK Stalin has criticized the claim that Rs 6000 would be given to the farmers in the budget
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X