சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலத்தில் கறிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. ஆட்டுக் கறி கிலோவுக்கு ரூ 100 உயர்வு

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் கறிக்கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆட்டு இறைச்சி கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்தது.

Recommended Video

    இன்று கறிக்கடைகளில் அலைமோதிய கூட்டம்.. சேலத்தில் ஆட்டுக்கறி கிலோவுக்கு ரூ.100 உயர்வு - வீடியோ

    சேலம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் கோலாகலமாக கொண்டாடினர். தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    Mutton flesh price rises to Rs 100 in Salem

    சேலம் சூரமங்கலம், அன்னதானப்பட்டி, பழைய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைச்சியை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளிப் பண்டிகை என்பதால் இன்று ரூபாய் 700 முதல் 800 வரை ஆட்டுக்கறி விற்கப்பட்டது. கிலோவிற்கு 100 ரூபாய் விலை அதிகரித்து இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

    Mutton flesh price rises to Rs 100 in Salem

    இதுபோல் பிராய்லர் கோழி கிலோ 180 ரூபாய்க்கும், வளர்ப்பு நாட்டுக்கோழி கிலோ 350 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கிலோ 550 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது, வியாபாரிகளின் மனதிற்கு நிறைவை தந்தது.

    ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!

    ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வியாபாரம் இன்றி தவித்து வந்த இவர்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வியாபாரம் மனநிறைவை தந்தது.

    English summary
    Chicken , mutton flesh sales very high today as yesterday Diwali function gets over.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X