சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய மோட்டார் வாகன சட்ட அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு.. நாளை நாடு முழுவதும் லாரிகள் ஓடாது

Google Oneindia Tamil News

Recommended Video

    மோட்டார் வாகன சட்ட அபராதங்களுக்கு எதிர்ப்பு.. லாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பு-வீடியோ

    சேலம்: மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வலியுறுத்தியும் நாடு முழுவதும் நாளை (19-ந்தேதி) ஒரு நாள் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் நாடு முழுவதும் விதிக்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாலை விதிமீறலுக்கு கடுமையான அபராதம் விதிப்பது லாரி தொழிலை கடுமையாக பாதிக்கிறது என லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    nationwide lorry strike tomorrow

    இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழநாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறுகையில், "புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், 44-ஏ.இ. வருமான வரி விதியை ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை லாரிகள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது என்றார். .

    விக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோவிக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ

    நாளை இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 390 லாரிகளும் இயங்காது என்றும் சென்னகேசவன் கூறினார்.

    இதனால் தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களும், சேலம் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்களும் தேக்கம் அடையும். எனவே, தமிழகத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1 கோடி வருவாய் இழப்பும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    English summary
    nationwide lorry strike tomorrow. lorry owners are opposing the diesel prices hike, toll plaza rates, new traffic fees amounts and third party insurance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X