சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்- இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனு

Google Oneindia Tamil News

சேலம்: நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு என அறிவித்த இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா மீது நடவடிகை எடுக்கக் கோரி சேலத்தில் சூர்யா ரசிகர்கள் மன்றத்தினர் போலீசில் மனு கொடுத்தனர்.

Recommended Video

    நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் என கூறிய இமக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனு - வீடியோ

    நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தமிழக மாணவர்களின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பேரவைக்குள் குட்கா: திமுகவின் இரண்டாவது ரிட் மனு மீது நாளை இடைக்கால தீர்ப்பு பேரவைக்குள் குட்கா: திமுகவின் இரண்டாவது ரிட் மனு மீது நாளை இடைக்கால தீர்ப்பு

    நீட்-சூர்யா அறிக்கை

    நீட்-சூர்யா அறிக்கை

    இது தொடர்பாக அறிக்கை ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். அதில், நீட் தேர்வை மனுநீதித் தேர்வு என விமர்சித்திருந்தார். மேலும் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு பொசுக்கப்படுவதாகவும் பொங்கி இருந்தார் சூர்யா.

    ஆதரவு- எதிர்ப்பு

    ஆதரவு- எதிர்ப்பு

    நடிகர் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் இதனை நிராகரித்தது.

    செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்

    செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்

    இதனிடையே திண்டுக்கல்லில் கடந்த 17-ந் தேதியன்று இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்தோருக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய தர்மா, நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறினார்.

    சூர்யா ரசிகர்கள் போலீசில் புகார்

    சூர்யா ரசிகர்கள் போலீசில் புகார்

    இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மாவின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வா தர்மா மீது மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நெத்திமேடு பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் சூர்யாவை தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசிய இந்து மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கினர்.

    English summary
    Actor Suriya's Fans had filed a complaint against Hindu outfit on Neet issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X