சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம்.. சிக்கிய 3 பேர் பகீர் காரணம்

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் வடமாநில தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41), மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கடந்த இரண்டு நாள் முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

 north state couple working at Yercaud estate in Salem district were hacked to death, 3 arrested

இது குறித்த விசாரணையில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்ரே 25, சுக்ராம் 22, ராம்சநாத் 35 ஆகிய மூவருக்கும் கொலையில் பங்குஇருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் முச்ரேவின் அண்ணன், புத்ராமினண மனைவி கங்கி கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சுதிர்கேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து கங்கிங்கு நாகலூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் பிரசவம் நடைப்பெற்று ஆண் குழந்தை பிறந்து, இறந்துள்ளது. பின்னர் கங்கியம் உடல்நிலை மோசமாகி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் அங்கு இறந்து விட்டார்.

முன்ன மாதிரி வாழறதை விட முன்ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் - கமல் அட்வைஸ் யாருக்கு முன்ன மாதிரி வாழறதை விட முன்ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் - கமல் அட்வைஸ் யாருக்கு

கங்கி மற்றும் அவர் குழந்தை இறந்ததற்கு சுதிகேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்ததே காரணம் என புத்ராம் எண்ணியுள்ளார்.

இதற்காக பழிவாங்குவதற்காகவே இந்த இரு கொலைகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள புத்ராம் மற்றும் ஹைரா புத்ரே ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
north state couple working at Yercaud estate in Salem district were hacked to death, 3 arrested by police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X