சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமை.. ஆசை ஆசையாக தங்கை திருமணத்துக்கு சென்ற அண்ணன் பலி.. கதறி துடித்த மணப்பெண்!

தங்கை திருமணத்துக்கு காரில் வந்த அண்ணன் விபத்தில் உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

சேலம்: தங்கச்சி கல்யாணத்தை பார்க்க ஆசை ஆசையாக காரில் புறப்பட்டு வந்த அண்ணன், விபத்துக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு பக்கம் அண்ணனின் சடலம் ஆஸ்பத்திரியில்.

எடப்பாடி அருகே சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவருக்கு 43 வயதாகிறது. இவருக்கு அபிராமி என்ற தங்கை இருக்கிறார். மஞ்சுநாதன் சென்னையில் ஒரு பிரைவேட் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்தார்.

தங்கை அபிராமிக்கு இன்று, கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருவம் பகுதியில் கல்யாணம். இதற்காக எடப்பாடியில் இருந்து, மண்டபத்துக்கு காரில் கிளம்பினார். அவருடன் மஞ்சுநாதன், தாயார் சரஸ்வதி, மற்றும் முகிலன் என்பவரும் காரில் இருந்தனர். அதே ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர்தான் காரை ஓட்டினார். டிரைவர் பக்கத்தில் மஞ்சுநாதன் உட்கார்ந்து கொண்டார்.

தினகரனின் அடுத்தடுத்த ஸ்டெப்ஸ்.. டென்ஷன் தலைக்கேறும் சசிகலா... என்னெல்லாம் ஆகுமோ!தினகரனின் அடுத்தடுத்த ஸ்டெப்ஸ்.. டென்ஷன் தலைக்கேறும் சசிகலா... என்னெல்லாம் ஆகுமோ!

மோதி நொறுங்கியது

மோதி நொறுங்கியது

காலை சுமார் 6 மணிக்கு ஆத்தூர், அப்பம்மசமுத்திரம் என்ற இடத்தில் 4 வழிச்சாலையில் கார் சென்றபோது, 2 வழிச்சாலை வந்தது. ஆனால் டிரைவர் இதை கவனிக்கவில்லை.. இதனால், கார் அங்கிருந்த ஒரு பாலத்தில் பயங்கரமாக மோதி நொறுங்கியது.

முறிந்தன

முறிந்தன

இந்த விபத்தில், முன்சீட்டில் இருந்த மஞ்சுநாதன் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் மற்றும் பின்சீட்டில் இருந்த ரதாய், சரஸ்வதி, முகிலன், ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரஸ்வதிக்கு 2 கால்களும் முறிந்துவிட்டது. கார் சுக்குநூறாக நொறுங்கியதில், 3 பேருமே வலியால் கதறி துடித்தனர். இதை கண்ட பொதுமக்கள், மற்றும் போலீசார் அவர்களை மீட்டு, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இந்த விபத்து நடந்து மீட்பு பணி நடந்து கொண்டிருந்தபோது, பின்னாடியே ஒரு வேனில் கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் வந்துள்ளனர். மஞ்சுநாதன், உயிரிழந்ததையும், 3 பேர் உயிருக்கு போராடுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து துடிதுடித்து அழுதனர்.

கல்யாணம்

கல்யாணம்

இந்நிலையில், விபத்து குறித்து கல்யாண பெண் அபிராமிக்கு சொல்ல வேண்டாம், கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று அந்த உறவினர்கள் கேட்டுக் கொண்டனர். அதனால், எல்லோரும் கிளம்பி மண்டபத்துக்கு சோகத்துடன் சென்றனர். அபிராமிக்கு எந்த தகவலையும் சொல்லாமல், இந்த கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. இதன்பிறகுதான் விஷயம் சொல்லப்பட்டது. படுகாயமடைந்த 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

English summary
Brother died in the Car accident near attur on his sisters wedding day and three injured severely
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X