சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனிதாவுக்காக 'நீட்'டை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. காங்.தேர்தல் அறிக்கை சுவாரஸ்யம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் குறித்த அறிவிப்பு வந்தது இப்படித்தான் - ராகுல் விளக்கம்

    சேலம்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    சேலத்தில் திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை கிடையாது. எங்களுடைய தேர்தல் அறிக்கை மக்களின் உணர்வுகளை உள்வாங்கிய வெளிப்படையான அறிக்கை.

    one more Anitha will not die in our courty for neet exam : says rahul gadhi

    ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்.. சேலத்தில் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி சூளுரைஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்.. சேலத்தில் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி சூளுரை

    அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயரை சொன்னார்கள். அனிதா என்ற பெயர் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டதாக சொன்னார்கள். சிறப்பாக படித்த அந்த ஏழை மாணவி நீட் தேர்வால் இறந்ததை கேட்டு வேதனை அடைந்தேன்.

    எனவே நீட் தேர்வால் இனியும் அனிதாக்கள் தற்கொலை நடக்கக்கூடாது என முடிவு செய்தேன். அதனால் நாங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை மாநிலங்களே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளோம், நீட் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை.

    ஸ்டாலின் பேசும் போது அவரது தந்தைக்கு மெரினாவில் இடம் தராமல் அவமதித்தவர்கள் பற்றி பேசினார். உண்மையில் அவர்கள் ஸ்டாலினின் தந்தையை மட்டும் அவமதிக்கவில்லை. பல ஆண்டுகளாக தமிழக மக்களுக்காக குரல் தொடுத்தவர் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதியை அவமதித்தன் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்" என்றார்.

    English summary
    congress leader rahul gadhi says one more Anitha will not die in our courty for neet exam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X