சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்ம.. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

மேட்டூர்: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிளுக்கு வாழ்வாதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. தர்மபுரி தொடங்கி நாகை வரை உள்ள அனைத்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் காவிரி நீர் தான்.. காவிரி வழிந்தோடும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நடப்பாண்டில் 4வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 87 ஆண்டுகள் ஆகும் நிலையில், 66- வது ஆண்டாக 100 அடியை எட்டியிருக்கிறது.

people happy over water level of Mettur Dam has reached 100 feet for the 4th time

காவரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அதன்பிறகு அக்டோபர் 13ம் தேதியும் இரண்டாவது முறையும், அக்டோபர் 24ம் தேதி 3வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.

ஹைதராபாத் தேர்தல்.. வாயை விட்ட டிஆர்எஸ் தலைவர்கள்.. கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜேபி நட்டாஹைதராபாத் தேர்தல்.. வாயை விட்ட டிஆர்எஸ் தலைவர்கள்.. கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜேபி நட்டா

நிவர்' புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக . மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருந்தது. இப்போது 4வது முறையாக இந்த ஆண்டு 100 அடியை எட்டியுள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை வடகிழக்கு பருவ மழையில் அடுத்தடுத்து வர உள்ள புயல் மற்றும் மழையால் நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் காவிரி நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து நேற்று காலை நிலவரப்படி 8111 அடியாகவும், நீர் இருப்பு 64.84 டிஎம்சி ஆகவும் உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக 500 கனஅடி நீரும், கிழக்குமேற்கு கால்வாய் பாசனத்திற்காக 250 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வதுமுறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Mettur Dam is the livelihood of the farmers of Cauvery Delta District. Cauvery water is the source of drinking water for all the districts from Dharmapuri to Nagapattinam.The water level of Mettur Dam has reached 100 feet for the 4th time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X