சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள்தான் முன்வந்து நிலம் தர வேண்டும்.. அப்போதுதான் மாநிலம் வளரும்.. சேலத்தில் முதல்வர் பேச்சு!

அதி விரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Salem 8 Way Project : 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா?- வீடியோ

    சேலம்: அதி விரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    தாரமங்கலத்தில் ரூ.24.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புற வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். ஓமலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக சங்ககிரி செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் பயன்பாட்டிற்காக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    தாரமங்கலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையை திறந்து வைத்து முதல்வர் பழனிச்சாமி சாலைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்!வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    முதல்வர் தனது பேச்சில், ஒரு மாநிலத்தின் தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சாலை வசதி சிறப்பாக இருக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதி சரியாக இருந்தால் அனைத்து விதமான வசதிகளையும் பெற முடியும்.

    மக்கள் முன்வர வேண்டும்

    மக்கள் முன்வர வேண்டும்

    மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். தொழிற் வளர்ச்சி அடைய மக்கள்தான் அரசுக்கு உதவ வேண்டும். மக்களின் உதவி இருந்தால் மட்டுமே சாலைகளை அமைக்க முடியும்.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    சாலையை மேம்படுத்த பொதுமக்கள் மனமுகந்து, எந்த வருத்தமும் இல்லாமல் அரசுக்கு நிலம் தர வேண்டும். அப்போதுதான் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தவிற்க முடியும். நல்ல சாலை இருந்தால் விபத்து நிகழாது. போக்குவரத்து நெரிசலும் தவிற்க முடியும்.

    முக்கியம்

    முக்கியம்

    தொழில்வளம் சிறக்க சாலை கட்டமைப்பு அவசியம். இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் தற்போது தாரமங்கலம் புறவழிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    People have to sacrifice lands the wholeheartedly says TN CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X