சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பாமகவை சேர்ந்த ரேவதி தேர்வு.. திமுக போட்ட ஒரு வாக்கால் வெற்றி

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலில் பாமக வெற்றி

    சேலம்: சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பாமகவைச் சேர்ந்த ரேவதி தேர்வு செய்யப்பட்டார். திமுக போட்ட ஒரு வாக்கால் இவர் வெற்றி பெற்றார்.

    தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவை காட்டிலும் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.

    21 உறுப்பினர்கள்

    21 உறுப்பினர்கள்

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த 21 உறுப்பினர்களும் திமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

    26 வாக்குகள்

    26 வாக்குகள்

    இதில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் வேட்பாளர் ரேவதியும் திமுக வேட்பாளர் நல்லம்மாளும் சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தம் 29 வாக்குகளில் 26 வாக்குகள் பதிவாகியிருந்தன.

    நல்லம்மாள்

    நல்லம்மாள்

    அதில் அதிமுக கூட்டணிக்கு 22 வாக்குகளும் திமுக வேட்பாளருக்கு 4 வாக்குகளும் கிடைத்தன. மொத்தம் உள்ள 5 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் மட்டுமே நல்லம்மாளுக்கு வாக்களித்தனர்.

    வெற்றி பெற்ற பாமக வெற்றி பெற்ற பாமக

    வெற்றி பெற்ற பாமக வெற்றி பெற்ற பாமக

    ஒருவர் மட்டும் மாற்றி அதிமுகவுக்கு அளித்துள்ளார். இதனால் மொத்தம் 22 வாக்குகள் அதிகம் பெற்ற ரேவதி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் தெரியாமல் வாக்களித்தாரா இல்லை வேண்டுமென்றே வாக்களித்தாரா என தெரியவில்லை.

    English summary
    PMK won in Salem District Panchayat president post as DMK candidates cast his vote to ADMk alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X