சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஒரே தெருவைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய வெள்ளி வியாபாரி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா சென்று வந்ததை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததால், ஒரே தெருவைச் சேர்ந்த 21 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

தலைநகர் பெய்ஜிங்கில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.. அரசும் மக்களும் ஹேப்பி! தலைநகர் பெய்ஜிங்கில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.. அரசும் மக்களும் ஹேப்பி!

வீடு வீடாக ஆய்வு

வீடு வீடாக ஆய்வு

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தியது. மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கண்காணிப்பு குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளி வியாபாரி

வெள்ளி வியாபாரி

கட்டுப்படுத்தப்பட்ட 32 பகுதிகளில் 60 ஆயிரம் வீடுகளில் மாநகராட்சி குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்தான் 54 வது வார்டு சீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெள்ளி வியாபாரியான இவர் அந்த வேலைக்காக இவர் மகாராஷ்டிரா சென்றுள்ளார்.

ரகசியம்

ரகசியம்

மறுபடியும் சேலம் திரும்பியபோது முறைப்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியமாக இருந்துள்ளார் இவர். மேலும் அக்கம்பக்கத்தினருடன் பழகியதாலும், அவர் வீட்டுக்கு பிறர் வந்து சென்றதாலும், கொரோனா தொற்று அந்த ஏரியாவுக்கே பரப்பப்பட்டுள்ளது.

போலீஸ் வழக்கு

போலீஸ் வழக்கு

எனவே, கொண்டலம்பட்டி காவல் நிலையத்தில், இவர் மீது நோய்த்தொற்று ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் செய்யும் தவறு, பிற மக்களையும், சமூகத்தையும் எப்படி பாதிக்கிறது பாருங்கள்.

English summary
Salem kondalampatti police have registered a case against a silver merchant who had gone to Maharashtra and return recently without giving any information to the corporation officials. He spread Corona infection to 21 people from the same streets, the officials of the Salem Corporation visited door to door to find Corona infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X