சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட 10 போலீஸ்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    சேலம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவருக்கு கொரோனா..

    சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    Police officials have sent to quarantine in salem

    இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணிகண்டன் வீட்டின் அருகே வசித்து வந்த சின்னசாமி என்பவர் கொள்ளையடித்தார் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    Police officials have sent to quarantine in salem

    பின்னர் கைதியை சிறையில் அடைப்பதற்கு முன்பாக வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கைதி சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    கொண்டலாம்பட்டி காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கைதியிடம் விசாரணை நடத்திய காவலர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காவலர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    Police officials have sent to quarantine in salem

    நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.. தலைநகர் பெய்ஜிங்கில் பரவிய கொரோனா.. ஜின்ஃபாடி மார்க்கெட் மூடல் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.. தலைநகர் பெய்ஜிங்கில் பரவிய கொரோனா.. ஜின்ஃபாடி மார்க்கெட் மூடல்

    காவல் நிலையத்தில் அன்னியர்கள் யாரும் அனுமதி இல்லாமல் உள்ளே வர வேண்டாம் என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய பணிகளை அருகே புகார்தாரர்கள் அமரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    English summary
    10 police officials have been sent to quarantine after Salem accused found corona positive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X