பண்ணை வீட்டில் பெண்களை.. துடிதுடிக்க நாசம் செய்த திருநாவுக்கரசுக்கு.. "அந்த" இடத்தில் பிரச்சினையாம்!
சேலம்: பொள்ளாச்சி சம்பவத்தில், பண்ணை வீட்டில் பெண்களை அலறி துடிக்கும் அளவுக்கு நாசம் செய்த திருநாவுக்கரசுக்கு உடம்பு சரியில்லையாம்.. ஆணுறுப்பில் பிரச்சனையாம்.. அதனால் தற்போது சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி சம்பவத்தை இன்னும் நம்மால் மறக்கவே முடியவில்லை.. 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், 300க்கும் மேல் இளம்பெண்களை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்தது அந்த கும்பல்.. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் திருநாவுக்கரசு.

எம்பிஏ படித்து விட்டு, பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர்.. 400 பெண்களை சீரழித்தவர்களில் கைதானவர்கள் 4 பேர்! அந்த 4 பேரில் திருநாவுக்கரசுதான் கேங் லீடர்! அழகான பெண்கள் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அவர்களிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி அதை சபரியிடம் தருவதுதான் திருநாவுக்கரசின் முக்கியமான வேலை.
ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில்தான் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பங்களாவில் சோதனை நடத்தியபோதுதான் ஏராளமான பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியனர்.. அந்த வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகளும் சிதறி கிடந்ததை கண்டு போலீசாரே அன்று அதிர்ந்தனர்..
இது தொடர்பாக திருநாவுக்கரசுடன், சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்... குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைதானார்கள்.. பிறகு குண்டர் சட்டமே ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... இவர்கள் பலமுறை ஜாமீன் கோரியும், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.. இது சம்பந்தமான வழக்கும் நடந்து வருகிறது.. இந்நிலையில், திருநாவுக்கரசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாம்.
அதனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.. டாக்டர்கள் செக் செய்து பார்த்ததில், திருநாவுக்கரசு ஆணுறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.. பிறகு அந்த ஆஸ்பத்திரியிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்!