சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆசிரியரின் விஷமம்.. கர்ப்பமான மாணவி.. கருவை கலைக்க மருத்துவமனையில் அனுமதி

ஆசிரியரால் கர்ப்பமான மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சேலம்: உதவி தலைமை ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமான மாணவிக்கு, கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளார்.

சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி. இவர் வேதியியல் ஆசிரியரும்கூட. வயது 45ஆகிறது.

பிளஸ்-2 படித்த மாணவியை 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி வேதியியல் ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்திருக்கிறார்.

அக்கா.. எங்களை விட்டுடுக்கா.. போட்றா முட்டியை.. செயின் பறித்த 2 பேருக்கு பெண்கள் தர்ம அடிஅக்கா.. எங்களை விட்டுடுக்கா.. போட்றா முட்டியை.. செயின் பறித்த 2 பேருக்கு பெண்கள் தர்ம அடி

கர்ப்பம்

கர்ப்பம்

இதனை வீடியோவாகவும் எடுத்து, அதை மாணவியிடம் காட்டி தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி இப்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது சம்பந்தமாக விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் விவகாரம் பெரிதாக வெடித்தது.

முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

பள்ளியின் தலைமை ஆசிரியரே புகார் கொடுத்தார். ஆனால் பாலாஜி தலைமறைவாகி விட்டார். எனினும் அவரை தேடி கண்டுபிடித்து, போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் சேலம் ஜெயிலில் அடைத்தனர். இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர், மற்றும் பொது மக்கள் பள்ளிக்கு திரண்டு முற்றுகை போராட்டமும் நடத்தினர்.

உத்தரவு

உத்தரவு

பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்றும், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து, ஆசிரியர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

இந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

English summary
Parents have decided to abort the pregnancy of the plus 2 student who was raped by the Chemistry teacher near Salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X