சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் ரயில் நிலையம்.. அது முன்னாடி.. இது இப்ப.... ரயில்வே அமைச்சர் போட்ட டுவிட்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் ரயில் நிலையம் முன்பு எப்படி இருந்து இப்போது பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதை பாருங்கள் என்று இரு புகைப்படங்களை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்து பலர் பாராட்டியும் விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

தமிழகத்தின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று சேலம் ரயில் நிலையம். கேரளாவில் இருந்து பிறமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் சேலம் வழியாகவே செல்ல வேண்டும். அதேபோல் கோவை, சென்னை நகரங்களை இணைக்கும முக்கிய ரயில் நிலையம் சேலம்.

railway minsiter Piyush Goyal share salem railway station photo

சேலத்தை மையமாக கொண்டு தான் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் , டெல்லி, மும்பை செல்பவர்கள், சேலம் வந்து அங்கிருந்து பெங்களூரு வழியாகவே ரயிலில் சென்னை செல்வார்கள்.

இந்நிலையில் சேலம் ரயில் நிலையத்தின் கட்டிடங்கள் வேறுவிதமாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது அதிநவீன ஐடி கட்டிடம் போல் மாற்றப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ரயில்வே அமைச்சருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். சிலர் முன்பு இருந்ததை மாற்றி பணத்தை வீணாக்குவதை விட புதிய ரயில்களை அந்த பகுதிக்கு அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

புனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி!புனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி!

English summary
Piyush Goyal on salem railway station: Changing the Face of Indian Railways: Check out the transformed Salem Railway Station in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X