சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அறிவு கெட்ட முண்டங்கள்தான் இப்படித்தான் பேசும்.. சேலத்தில் நிதானம் இழந்த ராமதாஸ்!

Google Oneindia Tamil News

சேலம்: பணத்தை பெற்றுக் கொண்டு 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு நடத்தினார்கள் என்று கூறுபவர்கள் அறிவில்லாதவர்கள், முண்டங்கள் என்று ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இக்கூட்டணிக்கு பாமகவினரே சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் அன்புமணி ராமதாஸும் ஒருவர். ஆனால் தீர்ப்பு அவர் கூட்டணி வைத்துள்ள அதிமுக- பாஜகவுக்கு எதிராக வந்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு! சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

மரியாதை

மரியாதை

இந்த நிலையில் சேலத்தில் அம்பேத்கரின் 128-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

ஸ்டாலின்

ஸ்டாலின்

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் இந்தியர்கள் அம்பேத்கர் காட்டிய சமூக ஒற்றுமை மற்றும் நல்லுறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரு சதவீத பாமக வாக்கு வங்கியை பெற்று மாபெரும் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

தவறான கருத்து

தவறான கருத்து

இப்போதெல்லாம் ஸ்டாலின் பேசுவதை விட மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை கொண்டு உளறி வருகிறார் என்றார். 8 வழிச்சாலை வழக்கு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் காசு வாங்கிக் கொண்டுதான் வழக்கு தொடரபட்டதாக தவறான கருத்தை சிலர் கூறி வருகின்றனர்.

முண்டங்கள்

முண்டங்கள்

இப்படி பேசுபவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள், முண்டங்கள் என கோபமாக கூறிய ராமதாஸ் பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
PMK Founder Ramadoss gets angry over the comment that PMK get money from farmers for case against 8 way path.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X