சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக தான் என்று பார்த்தால் பாமகவுமா? முதல்வர் வேட்பாளர்.. ஜிகே மணி பேச்சால் அதிமுக ஷாக்!

Google Oneindia Tamil News

சேலம்: பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்தத்து பாமக, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று வெளிப்படையாக இன்னமும் அறிவிக்காமல் உள்ளது.

கூட்டணி கட்சிகளும் இணைந்து அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அண்மையில் தூது சென்ற அமைச்சர்களிடமும் ராமதாஸ் உறுதியான பதிலை தெரிவித்ததாக தகவல் இல்லை. எனினும் அதிமுக கூட்டணியில் தான் பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நீடிப்பதாக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேர்தல் வரட்டும்

தேர்தல் வரட்டும்

இந்நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜிகே மணி, தேர்தல் கூட்டணி என்பது அது வேறு, இன்னமும் தேர்தல் நெருங்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது கூட்டணியை பொறுத்து முதல்வர் வேட்பாளரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்றார்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

அப்போது செய்தியாளர்கள் ஜிகே மணியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பளராக ஏற்பீர்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த ஜிகே மணி. அதிமுகதான் முதல்வர் வேட்பளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளது. தேர்தல் வரும் நேரத்தில், எங்கள் மருத்துவர் ஐயா, அதை பொறுத்து அறிவிப்பார் என்றார்.

மீண்டும் மனமாற்றம்

மீண்டும் மனமாற்றம்

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளது குறித்து செய்தியார்கள் கேட்டதற்கு, ரஜினிக்கு மீண்டும் மனமாற்றம் வரலாம் என்றார். ரஜினி டிசம்பர் 31 ம் தேதி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் கட்சியே வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட நிலையில், ஜிகே மணி மீண்டும் அவருக்கு மனமாற்றம் வரலாம் என்று கருத்து கூறியிருக்கிறார்

அதிக சீட் கேட்பு

அதிக சீட் கேட்பு

அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை இதுவரை பாஜக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கவில்லை. மாநில தலைவர் முருகன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கட்சியின் டெல்லி மேலிடம் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறிவருகிறார்கள். அந்த வரிசையில பாமகவும் இப்போது இணைந்திருப்பது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிடம் அதிக இடங்கள் கேட்டு வருவதால் முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிப்பதாக சொல்லப்படுகிறது.

English summary
pmk leader gk mani said that Ramadoss will announce the chief ministerial candidate in our alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X