சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Cauvery Opened | துள்ளிகுதித்து மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்- வீடியோ

    சேலம்: மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7,200 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரை விட அணையிலிருந்து குறந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் மிகவேகமாக உயர்ந்து வருகிறது.

    Rapidly rising water level in the Mettur dam .. peoples and farmers happy

    கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று 41.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 42.15 அடியாக அதிகரித்துள்ளது.

     ம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம் ம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம்

    இனிவரும் நாட்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நீர்மட்டம் மேலும் அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் உள்ள அடிபாலாறு பண்ணவாரி பகுதிகளில் காவிரி ஆற்றில் நுரையுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செட்டிபட்டி கோட்டையூர் பண்ணவாரிபரிசல் துறைகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு மாற்றியுள்ளனர். ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர், பண்ணவாரி பகுதிகளில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கின. இந்த மீன்களை கரையோர பகுதியில் வசிக்கும் மக்களும் அள்ளி சென்றனர்.

    English summary
    According to the Mettur Dam this morning, water is coming in at 7,200 cubic feet per second.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X