சேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஐசியூ உள்பட அனைத்து இடங்களிலும் நடமாடி வந்த எலிகள் ஆங்காங்கு கூண்டுகள் வைக்கப்பட்டு பிடிக்கப்பட்டன.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சேலம் நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புறநோயாளிகளாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எலிகள் நடமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்

மருத்துவமனை
இந்த வீடியோவில் ஆக்சிஜன் பைப் லைன் மீது எலிகள் ஓடுகின்றன. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உணவுகளை எலி கடித்தது தெரியாமல் நோயாளிகள் உணவை உட்கொண்டால் நோயாளிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

கூண்டுகள்
ஆக்சிஜன் பைப் லைனை தவறுதலாக எலி கடித்து விட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது என்று வீடியோவுடன் ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டன. இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக மருத்துவமனையில் எலி நடமாட்டம் உள்ள வார்டுகளில் எலி பிடிக்கும் கூண்டுகள் வைத்து, ஏராளமான எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன.

ஓட்டைகள்
இது தொடர்பாக அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எலி பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஃபால்ஸ் சீலிங்கில் உள்ள ஓட்டைகள் வழியாக சென்று எலி பதுங்கி கொள்வதால் அவற்றை முற்றிலும் ஒழிப்பதில் சிரமம் இருக்கிறது.

வீடியோ
அதே நேரத்தில் இன்று சமூக வலைதளங்களில் பரவும் எலி வீடியோ நீண்ட நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டது. 40 சிறிய கூண்டுகள், இரண்டு மெகா கூண்டுகள் மற்றும் ரேட் கேக், உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு, பெரும்பாலான எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து எலி பிடிக்கும் பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடைபெற்று வருகிறது எனஅரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்.