சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கும்மிருட்டு.. "அந்த" இடம்தான் வசதியா இருந்துச்சு... சேலம் கொள்ளையர்கள் பகீர் தகவல்

சேலம் ரயில் கொள்ளையர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் ரயில் கொள்ளையர்களுடன் வங்கி அதிகாரிகள் உடந்தையா?- வீடியோ

    சென்னை: "கும்மிருட்டாக இருந்த "அந்த" இடம்தான் எங்களுக்கு கொள்ளையடிக்க ரொம்ப வசதியா இருந்தது.. இந்த இடத்தை கண்டுபிடிக்க பலூன், பொம்மைகள் விற்பது போல நடித்தோம்... " என்று சேலம் கொள்ளையர்கள் அடுத்த பகீரை சொல்லியுள்ளனர்.

    சிபிசிஐடி போலீசார் வசம் சிக்கியுள்ள 5 பேரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்களை சொல்லி உள்ளனர். ஆரம்பத்தில் 10 நாளுக்கு வாயே திறக்காமல் இருந்து பார்தி மொழியில் பேசி போலீசாரை திணறடித்தனர். பிறகு வயிற்று வலி டிராமா ஆடி போலீசாரை அலைக்கழித்தனர். அதன்பின்னர்தான் பேசவே ஆரம்பித்தனர். அப்போது எல்லா பணத்தையும் செலவு பண்ணிட்டோம் என்றனர். இதைக் கேட்டு போலீசார் அதிர்ந்தாலும், அவ்வளவு பணத்தை எவ்வளவு இவ்வளவு சீக்கிரம் செலவு செய்திருக்க முடியும் குழம்பினர்.

    [சேலம் ரயில் கொள்ளையர்களுடன் வங்கி அதிகாரிகள் உடந்தையா.. திடீர் பரபரப்பு ]

    மோஹர் சிங்

    மோஹர் சிங்

    தொடர்ந்து, அந்த பணம் ரயிலில் வருவது எங்களுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும் என்று அடுத்த குண்டை போட்டனர். இதனால் வங்கி அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்குமா என போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது தங்களது வாக்குமூலத்தில் புதுபுது தகவல்களை சொல்லி உள்ளனர். குறிப்பாக இந்த கொள்ளை கும்பலுக்கே தலைவர் மோஹர் சிங் போலீசாரிடம் தெரிவித்ததாவது:

    குல தொழில்

    குல தொழில்

    மத்திய பிரதேசத்தில் க்ஹெஜ்ராசக் என்ற கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். எனக்கு 3 அக்கா, 3 அண்ணன். என் அத்தை பசங்க 7 பேர் இருக்காங்க. அதோடு எங்க சொந்தக்காரங்க, நண்பர்கள் என எல்லோரும் சேர்ந்துதான் கொள்ளையில் ஈடுபடுவோம். இதுதான் எங்களுக்கு காலகாலமாக நடந்து வரும் தொழில்.

    நோட்டம் போட்டோம்

    நோட்டம் போட்டோம்

    எங்க அத்தை பையன் கிரண்தான் எங்களுக்கு கேங் லீடர். ஒரு கேஸ் விஷயமா அவரை போலீஸ் சுட்டு கொன்னுட்டாங்க. அதனால அவரது ஆதரவாளர்களை நான் கொன்றுவிட்டு 2016-ல் தமிழ்நாட்டு பக்கம் வந்துட்டேன். என்கூட என் ஆளுங்களும் கூடவே வந்துட்டாங்க. அதுக்கப்புறம்தான் விழுப்புரம், திண்டிவனம், விருதாச்சலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி இடங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷ்ன், தண்டவாளங்கள், ரோடு, ப்ரிட்ஜ் போன்ற இடங்களில் தங்கி அந்த பகுதிகளை எல்லாம் நோட்டம் போட்டோம்.

    பலூன் விற்றோம்

    பலூன் விற்றோம்

    அந்த நேரத்தில்தான் என் க்ரூப்பில் இருந்த ஒருத்தர் சேலம் ரயிலில் பணம் வரப்போகிற தகவலை சொன்னார். அதன்படிதான் நான் எனது குழுவை சேர்ந்த காளியா(எ) கிருஷ்ணா(எ)கபு, மகேஷ் பர்டி, ரூசி பர்டி, பிலித்தியா (எ) பர்ஜிமோகன் ஆகியோருடன் பலமுறை ரயில்வே ஸ்டேஷன்களை கண்காணிக்க ஆரம்பித்தோம். குறிப்பாக அயோத்தியபட்டினம் மற்றும் விருதாச்சலம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வாரத்துக்கு பலூன், பொம்மைகள் விற்பது போல் நோட்டமிட்டோம்.

    வெளிச்சம் இல்லை

    வெளிச்சம் இல்லை

    அந்த நேரத்தில்தான் சின்ன சேலம் - விருதாச்சலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே 45 நிமிடங்கள் ரயில்கள் நின்று செல்வது தெரியவந்தது. ஆனால் அதைவிட இன்னொரு விஷயம், வயலூர் மேம்பலம் அருகே மின்பாதை தொடங்கும் முன்பு நின்று செல்லும் பகுதியில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்பட்டது.

    வெட்டும் கருவிகள்

    வெட்டும் கருவிகள்

    இந்த கும்மிருட்டுதான் எங்களுக்கு பெரிய உதவியா இருந்தது. கொள்ளை அடிக்க இந்த இடம்தான் சரியான இடம்னு முடிவு பண்ணிட்டோம். அதனால பேட்டரியால் இயங்க கூடிய தகடுகள் வெட்டக்கூடிய கருவிகள், கைகளால் தகடுகளை வெட்டக்கூடிய கருவிகள் ஆகியவற்றை ரெடி பண்ணோம். 200 மீட்டர் இடைவேளிக்கு யாராவது வருகிறார்களா என்றும் நோட்டம் போட்டோம்.

    45 நிமிஷம் தாமதம்

    45 நிமிஷம் தாமதம்

    2 குரூப்பாக பிரிந்தோம். சேலத்தில் பணம் ஏற்றப்பட்ட ரயிலில் 2 பேரும், அயோத்தியபட்டினம், வாழப்பாடி, சின்னசேலம் ஆகிய ஸ்டேஷன்களில் தலா 2 பேரும் பிளான் பண்ணியபடி ஏறிக் கொண்டோம். சின்ன சேலம் மற்றும் விருதாச்சலம் ஸ்டேஷன்களுக்கு இடையே 45 நிமிஷம் எல்லா ரயில்கள் நின்று போவது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

    6 பண்டல் பணப்பெட்டி

    6 பண்டல் பணப்பெட்டி

    அந்த இடத்தில்தான் எங்கள் வேலை தொடங்கியது. ரயில் பெட்டி மீது ஏறி மேல் கூரையை வெட்டினோம். 2 பேர் ஓட்டைக்குள் இறங்க மரப்பெட்டியில் இருந்த 6 பண்டல் பெட்டியுள்ள பணத்தை எடுத்தார்கள். கீழே நின்றுகொண்டிருந்த எங்களிடம் தந்தார்கள். பிறகு ரயில் கிளம்ப தயாரானது. அதற்குள் எல்லோரும் ரயிலைவிட்டு இறங்கிவிட்டோம்.

    செலவு பண்ண முடியல

    செலவு பண்ண முடியல

    சொந்த ஊருக்கு பணத்தை கொண்டு சென்று எல்லோரும் சமமாக பிரித்து கொண்டோம். ஆனால் கொள்ளையடித்த கொஞ்ச நாளிலேயே ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லிவிட்டதால் ஷாக் ஆகிட்டோம். பணத்தை கொண்டு போய் எங்கெங்கியோ மாற்ற முயற்சி செய்தோம். ஆனால் எல்லா நோட்டையும் மாற்ற முடியவில்லை. இவ்ளோ கஷ்டப்பட்டும் பணத்தை முழுசா எங்களால அனுபவிக்கவே முடியல." இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறினார்.

    English summary
    Robbers Confession about Salem Train robbery
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X