சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜீப்பிலிருந்து குதித்து.. போலீஸாருக்கு கத்திக் குத்து.. சேலம் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சேலம் ரவுடி கதிர்வேலு என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசிடமிருந்து தப்பி ஓடும் போது ரவுடி என்கவுன்டரில் கொலை- வீடியோ

    சேலம்: போலீஸையே தாக்கிவிட்டு, அவர்கள் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு தப்பித்து ஓடிய கதிர்வேலு என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    சேலம், காரிப்பட்டி தேவாங்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேலு. இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறிகளில் தொடர்பு என ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளன.

    17 நாட்களுக்கு முன்புகூட முறுக்கு வியாபாரி கணேசனை இவர் கொலை செய்துவிட்டார். ஆளும் எஸ்கேப் ஆகி இருந்தார். இதனால் கதிர்வேலுவை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    கொலையாளி

    கொலையாளி

    கடைசியில் பலகட்ட முயற்சிக்கு பிறகு காரிப்பட்டி போலீஸார், சேலத்தில் கொலையாளியை கண்டுபிடித்துவிட்டனர். சேலம் நகர் பகுதியில் அங்கே பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததுமே, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான படையினர் கதிர்வேலுவை ரவுண்டு கட்டிவிட்டனர்.

    கதிர்வேலு

    கதிர்வேலு

    உடனடியாக கைது செய்து, ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, வழியில் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் கதிர்வேலு.

    தப்ப முயற்சி

    தப்ப முயற்சி

    திடீரென பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, சுப்பிரமணி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஹரியிடம் காட்டி மிரட்டியுள்ளார். இதில் ஹரிக்கு காயத்தை ஏற்படுத்தியதுடன், ஜீப்பிலிருந்து தப்பி ஓடவும் முயற்சி செய்துள்ளார் கதிர்வேலு.

    என்கவுண்டர்

    என்கவுண்டர்

    போலீசாரின் பிடியில் தப்பி ஓடியதால் வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடி அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார். போலீஸ் என்கவுண்டரில் ரவுடி பலியான சம்பவம் காரிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Rowdy Kathirvel shot dead while escaping in encounter by Police near Salem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X