சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுராத்திரி வீடியோ போட்ட அதிமுக பூங்கொடி.. திமுகவுக்கு தந்த திடீர் ஆதரவு.. எம்எல்ஏ மீது பகீர்..!

Google Oneindia Tamil News

சேலம்: அதிமுக எம்எல்ஏவால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று, பெண் கவுன்சிலர் ஒருவர் நடுராத்திரி வீடியோ போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    நடுராத்திரி வீடியோ போட்ட அதிமுக பூங்கொடி.. திமுகவுக்கு தந்த திடீர் ஆதரவு.. எம்எல்ஏ மீது பகீர்..!

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவராக இருந்தவர் ஜெகநாதன்... அதிமுகவை சேர்ந்த இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன..

    இதனால், இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வைத்திட ஒன்றிய குழு கூட்டத்தை நடத்திட திமுகவினர் அனுமதி கோரினர்... ஆனால் இதற்கு கோர்ட் மூலமாக தடை உத்தரவையும் பெற்றுவிட்டனர்.

    இப்ப இல்லைன்னா எப்போ? கவுன்சிலர் கனவில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்! மீண்டும் தொடங்கிய நச்சரிப்பு! இப்ப இல்லைன்னா எப்போ? கவுன்சிலர் கனவில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்! மீண்டும் தொடங்கிய நச்சரிப்பு!

    மேல்முறையீடு

    மேல்முறையீடு

    இதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்தது மட்டுமல்லாமல் அதிமுகவினர் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதை கோர்ட்டில் நிரூபித்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை ஹைகோர்ட், அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கூட்டத்தை நடத்த அனுமதி அளித்திருந்தது.

    அதிமுக

    அதிமுக

    இதனை தொடர்ந்து கடந்த 21ம் தேதி பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான கூட்டமும் நடைபெற்றது... இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாமல் அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் சங்கீதா என்ற இரண்டு பெண் கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தனர்... அதாவது திமுக உறுப்பினருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.. இதையடுத்து அதிமுக தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது.

    மிரட்டல் கையெழுத்து

    மிரட்டல் கையெழுத்து

    இந்த நிலையில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஈரோடு செல்லும்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நள்ளிரவில் 20 பேர் கொண்ட திமுக கும்பலால் கடத்தப்பட்டதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி பயமுறுத்தி திமுகவுக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டதாக தெரிவித்தனர்.

    பூங்கொடி

    பூங்கொடி

    இதனிடையே, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பூங்கொடி என்ற பெண் கவுன்சிலர் தானும், சங்கீதாவும் கடத்தப்பட்டதாகவும், தங்களை மிரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து போட செய்ததாகவும் பேசும் ஆடியோ போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது... இந்த ஆடியோ பதிவை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    பூங்கொடி

    பூங்கொடி

    இந்த சூழலில், அதிமுக பெண் கவுன்சிலர் பூங்கொடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்... அதில், நான் தான் 4வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி.. நான் விருப்பப்பட்டுதான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்து போட்டேன்.. யாருடைய கட்டாயத்தின் பேரிலோ, யாருடைய தூண்டுதலின் பேரிலோ கையெழுத்து போடல.. எம்எல்ஏ ராஜமுத்து அவர்களும், ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் ஜெகந்நாதன் அவர்களும், என்னை ஆடியோ பதிவு தர சொல்லி ரொம்ப கட்டாயப்படுத்தினாங்க.. கொலை மிரட்டலும் விடுத்தனர்..

    சங்கீதா

    சங்கீதா

    தொந்தரவு தந்ததால் மட்டும்தான் ஆடியோ பதிவு தந்தோம்.. விருப்பப்பட்டு தரல.. நானும் சங்கீதாவும் விருப்பப்பட்டே கையெழுத்து போட்டோம்.. எங்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. என் வீட்டுக்கு வந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மிரட்டி எடுத்த ஆடியோவை வைத்துக்கொண்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திமுக

    திமுக

    நடந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை என்னவென்று இதுவரை தெரியவில்லை.. எனினும் திமுகவினர் தான் தங்களை கடத்தி மிரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து இட செய்ததாக வெளியான ஆடியோ பதிவும், அதை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளதும் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Salem ADMK 2 female councilors join DMK and complaint against ADMK MLA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X