சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா.. தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்

கடத்தப்பட்ட சேலம் தொழிலதிபரை விடுவிக்க போலீஸ் மும்முரம் காட்டி வருகிறது

Google Oneindia Tamil News

ஆத்தூர்: "ஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா உன் அண்ணனை உயிருடன் பார்க்க முடியாது" என்று போன் வந்ததுமே அரண்டு போய்விட்டார் துரைராஜ்! இதையடுத்து, கடத்தப்பட்ட தொழிலதிபரை விடுவிக்க, போலீசார் தற்போது தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியைச் சேர்ந்தவர் கொம்பாட்டி மணி. 57 வயதான இவர் ஒரு தொழிலதிபர். கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை, வணிக வளாக கடை வைத்துள்ளார்.

கடந்த 17ம் தேதி வேலை முடித்துவிட்டு மணி தனது பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சம்பேரி பஸ் ஸ்டேண்ட் வந்தபோது, திடீரென ஒரு கார் எதிரே வந்து வழிமறித்து நின்றது.

டேய் விடுடா.. அடிக்கட்டும்.. வாங்கிக்கலாம்.. அத்துமீறிய இளைஞர்கள்.. அள்ளி கொண்டு போன போலீஸ்டேய் விடுடா.. அடிக்கட்டும்.. வாங்கிக்கலாம்.. அத்துமீறிய இளைஞர்கள்.. அள்ளி கொண்டு போன போலீஸ்

கடத்தல்

கடத்தல்

அதில் இருந்து ஒரு கும்பல் தபதபவென இறங்கினர். மணியை குண்டு கட்டாக தூக்கி, காரில் போட்டு கொண்டு பறந்தனர். இதையடுத்து நேரமாகியும் வீட்டுக்கு மணி வராததால், போலீசில் புகார் தரப்பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

ஒரு கோடி ரூபாய்

ஒரு கோடி ரூபாய்

இந்நிலையில், நேற்று முன்தினம் மணியின் தம்பி துரைராஜ்-க்கு ஒரு போன் வந்தது. அதில், எதிர் முனையில் பேசிய மர்மநபர், " ஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா உன் அண்ணனை உயிருடன் பார்க்க முடியாது" என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிட்டார்.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

இதனால் அதிர்ந்து போன துரைராஜ், உடனடியாக போலீசில் புகார் தந்தார். ஏற்கனவே இதுபற்றின விசாரணை நடந்து வருவதால், இந்த வழக்கு போலீசாருக்கு சவாலாக மாறி உள்ளது. மிரட்டல் வந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டால், அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் இருந்து பேசியது தெரியவந்தது. அதனால் விவகாரம் சைபர் கிரைம் போலீசாருக்கு சென்றுள்ளது.

விரைவு

விரைவு

எனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு போலீசார் இப்போது விரைந்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்டவர்கள் யார்? ஏதாவது முன்பகையா? மணியை மீட்டு போலீசார் அழைத்து வந்துவிடுவார்களா என்ற பெரிய எதிர்பார்ப்பு சேலத்தில் ஏற்பட்டுள்ளது

English summary
Salem Business man Kidnapped by 4 people and demanded Rs 1 Crore. Attur Police are investigation into the matter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X