சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் குடை.. கேரளா பாணியில்.. சேலம் கலெக்டர் தந்த சூப்பர் ஐடியா

Google Oneindia Tamil News

சேலம்: பொது வெளியில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க கேரளாவில் பின்பற்றபடுவது போன்று பொதுமக்கள் குடை பிடித்து வரலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தினார்.

Recommended Video

    சூப்பர் ஐடியா !! கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான திட்டம் !

    சேலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் காலை மற்றும் மதிய உணவோடு முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கென நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சார்பில் இரண்டாம் கட்டமாக ஒன்றரை லட்சம் முட்டைகள் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் வழங்கப்பட்டன.

    salem collector new ideas for social distance, use umbrella in public places

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன், சேலத்தில் கொரோனா சமூக பரவல் இதுவரை ஏதும் இல்லை என்றும் கடந்த சனிக்கிழமை முதல் சேலம் மாவட்டத்தில் அமுல் படுத்தப் பட்டிருந்த முழு ஊரடங்கு நாளை தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த முழு ஊர் அடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் காவல் துறையினர் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன் நாளை முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் பிற்பகல் ஒரு மணி வரை இயங்கும் என்றும் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் தனிமனித இடைவெளி முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    salem collector new ideas for social distance, use umbrella in public places

    மேலும் கேரள மாநிலத்தில் பின்பற்றப்படுவது போன்று குடைகள் பிடித்து தனிமனித இடைவெளியை கடை பிடிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

    English summary
    salem collector raman new ideas for social distance, use umbrella in public places like kerala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X