சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே!

கண் கலங்கி பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி வீடியோ வைரலாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கலெக்டர் ரோகிணி செய்தியாளர்களிடம் நா தழு தழுத்து பேசிய வீடியோ

    சேலம்: கலெக்டர் ரோகிணி செய்தியாளர்களிடம் நா தழு தழுத்து பேசிய வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

    இதுவரைக்கும் சேலத்துக்கு 170 கலெக்டர்கள் வந்துவிட்டார்கள். ரோகிணி 171-வது கலெக்டர். ஆனால் இந்த மாவட்டத்துக்கு இவர்தான் முதல் பெண் கலெக்டர்.

    கலெக்டராக பதவி ஏற்றது முதல் நல்லது, கெட்டது என இரு சாராரின் விமர்சனங்களையுமே தாங்கி வருகிறார் கலெக்டர் ரோகிணி. ஆனால் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய திடீரென நா தழுதழுத்து கண் கலங்கினார். என்ன காரணம் தெரியுமா?

    காலேஜ் போகவில்லை

    காலேஜ் போகவில்லை

    சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அப்துல் சமஸ். இவரது மகள், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். ஆனால் மாணவியின் குடும்பம் ரொம்ப ஏழ்மையான பின்னணியை கொண்டது. அதனால் படிக்கறதுக்கு ஃபீஸ் கூட கட்ட முடியாமல் தவித்துள்ளது குடும்பம். காலேஜ் போனால் ஃபீஸ் கேட்பார்கள் என்று நினைத்து, கொஞ்ச நாளாக மாணவி வகுப்புக்கும் போகவில்லை.

    பாதியில் நிறுத்துவதா?

    பாதியில் நிறுத்துவதா?

    அதன்பிறகுதான் அந்த மாணவியின் அம்மா சேலம் கலெக்டரிடம் நிலைமையை சொல்லி மனு கொடுத்து இருக்கிறார்கள். இந்த விண்ணப்பம் கலெக்டர் கண்ணில் படவும், மனம் வருந்தி போய்விட்டார். 2 வருஷம் படிச்சிட்டு, 3-வது வருஷம் படிப்பை பாதியில் நிறுத்துவதா என்று அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அழகாபுரி இந்தியன் பேங்குக்கு கிளம்பிவிட்டார் ரோகிணி.

    ரூ.4 லட்சம்

    ரூ.4 லட்சம்

    மாணவிக்கு கல்வி உதவி தொகைக்கு ஏற்பாடு செய்தார். 10 நிமிஷத்தில் கடன் உதவி ரெடியாகிவிட்டது. கல்வி தொகையாக இந்தியன் பேங்க் 4 லட்சம் ரூபாய் செக் தந்தது. அதனை கலெக்டர் வாங்கி மாணவியிடம் தந்தார். அதோடு "படிக்க வேற என்ன உதவி வேண்டுமோ அவ்வளவும் செய்கிறேன்" என்று அந்த மாணவிக்கு கலெக்டர் உறுதி கூறினார்.

    கண் கலங்கினார்

    கண் கலங்கினார்

    கலெக்டர் பேங்குக்கு வந்திருக்கிறார் என்றதும் செய்தியாளர்களிடம் அங்கு விரைந்தார்கள். இதுகுறித்து பேசியபோதுதான் ரோகிணி தன்னை மறந்து கண் கலங்கி பேசினார். அப்போது மருத்துவ மாணவியும் கலெக்டர் அருகில்தான் நின்று கொண்டிருந்தார். கலெக்டர் ரோகிணி பேசும்போது, "இந்த உதவியை நான் வெறும் கலெக்டராக செய்யவில்லை. ஒரு பெண்ணுக்கு சக தோழி செய்வது போலதான் நான் செய்தேன்.

    கல்வி அவசியம்

    கல்வி அவசியம்

    தன்னை போல இன்னும் எத்தனையோ பெண்கள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் மேலெழுந்து வந்து நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அவர்களுக்கு கல்விதான் அத்தியாவசியம் என்று சொல்லி கொண்டே வந்தார் ரோகிணி. அப்போதுதான் வார்த்தை வராமல் தொண்டை அடைத்தது அவருக்கு.

    நாங்கள் இருக்கிறோம்

    நாங்கள் இருக்கிறோம்

    நன்றாக படிக்கக் கூடிய பெண்கள் இப்படி படிப்பை பாதியிலேயே நிறுத்தக்கூடிய சூழல் வந்தால், அவர்களுக்கு உதவ 24 மணி நேரமும் 'நாங்கள் இருக்கிறோம்" என்று அழுதபடியே சொல்லி முடித்தார் ரோகிணி. கலெக்டர் ரோகிணியின் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

    English summary
    Salem District Collector Rohini's Emotional Speech.. Video goes Viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X